பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயினும், அரசியல் உலகில் வளர்ந்து செல்வாக்குப் பெற்றுக் கொண்டிருந்த இளைய தலைவர்களின் நூல்கள் இளைஞர்கள் வட்டாரத்தில் நல்ல கவனிப்பையும் ஆதரவையும் பெற முடிந்தது.

ஜவஹர்லால் நேருவின் சுயசரிதம்; ஜெயப்பிரகாஷ் தாராயணனின் அபேதவாதம் என்றால் என்ன? போன்ற நூல்கள்; சுபாஷ் சந்திரபோஸின் இளைஞன் கனவு’ முதலிய புத்தகங்களை அன்றைய இளைய தலைமுறை யினர் உற்சாகத்தோடு படித்தார்கள்.

தமிழ் நாட்டில், சமூக சீர்திருத்தம் - மூடநம்பிக்கை களின் ஒழிப்பு - மனித மேம்பாடு பற்றிய புரட்சிகரமான கருத்துக்களை துணிச்சலாக ஒலி பரப்பிக் கொண்டிருந்த பெரியார் ஈ.வெ. ராமசாமியின் எழுத்துக்கள் ஒரு சாராரைக் கவரும் வல்லமை பெற்றிருந்தன.

பெரியாரின் கருத்துக்களை வலியுறுத்தும் விதத்தில், விறுவிறுப்பும் வேகமும் கொண்ட நடையில் எழுதப்பட்ட கட்டுரைகள், கதைகளைத் தாங்கி வந்த பகுத்தறிவு' 'குடியரசு’ ஆகிய சஞ்சிகைகளும், தின இதழான விடுதலை யும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டு இருந்தன.

1930 - களின் பிற்பகுதியில் விடுதலை யில் சி.என். அண்ணாதுரையின் தனித்தன்மையும் வேகமும் கொண்ட நடையில், ம க்க ைள எண்ணத் துண்டிய சிந்தனைக் கட்டுரைகளும், உணர்ச்சி செறிந்த தலையங்கங்களும் தொடர்ந்து பிரசுரமாயின. அவற்றால் வசீகரிக்கப்பட்ட வாசகர்களின் தொகையும் வளர்ந்து கொண்டே போயிற்று.

வாசகர்களும் விமர்சகர்களும் 33