பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்நாட்களில் புத்தகங்கள் கவர்ச்சியும் கண்ணைக் கவரும் அட்டைபடமும் கொண்டு தயாரிக்கப்பட்டதில்லை. ஆரம்பகாலச் சிறுகதைத் தொகு தி க ள் - வ. வெ சு. ஐயரின் சம ங் ைக ய ர் க் கர சி யி ன் காதல்’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தாகூர் கதைகள், கல்கியின் சாரதையின் தந்திரம் எல்லாம், ரொம்ப சாதாரணமாக, எளிய தோற்றத்தில், மலிவான பாடப் புத்தகங்கள் போலவே அமைந்திருந்தன.

1938 வாக்கில் வெளிவந்த கல்கியின் கணையாழியின் கவுை முதலிய கதைகளைக் கொண்டிருந்த தொகுப்பு தான் பலவர்ணங்களில் அச்சிடப்பட்ட அழகான அட்டைச் சித்திரத்தையும் நேர்த் தி யான கட்டமைப்பையும் பெற்றிருந்தது. ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய நீண்ட முன்னுரை அதற்கு அணி செய்தது. இவையும் வாசகர்களுக்கு பிடித்தமான அம்சங்களாயின.

நாற்பதுகளின் ஆரம்பம் முதல் சிறுகதைத் தொகுதிகள் நிறையவே வரலாயின.

புதுமைப் பித்தன் கதைகள்’ என்ற 29 கதைகள் கொண்ட தொகுப்பு - நவயுகப் பிரசுராலய வெளியீடாக வந்தது. இத்தொகுப்புக்கு ரா. பூரீ. தேசிகன், ரசனா ஆர்வமான, அழகிய நீண்ட முன்னுரை ஒன்று எழுதி இருந்தார்.

தொகுதியில் சேராத புதுமைப் பித்தன் கதைகள் "நாசகாரக்கும்பல் ஆறுகதைகள்' என்று சிறு சிறு பத்தகங்களாக வெளியிடப்பட்டன. புதுமை பித்தன் மொழி பெயர்த்த உலக மொழிக் கதைகள் 'உலகத்துச் சிறு

இ வாசகர்களும் விமர்சகர்களும் 36