பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரதரங்களாகவும்: அடுக்கடுக்காக வந்து வாசகர்கள் உள்ளத்தில் இடம் பெற்றன.

இதன் பாதிப்பாக, தமிழிலும் சொந்தமாக சமூக நாவல்கள் தோன்ற வேண்டும் என்ற உணர்வு தமிழ் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உண்டாவிற்று. அதனால் புதிது புதிதாக சமுக நாவல்கள் தோன்றலாயின.

இதற்கு முன்னதாகவே, 1980களிலேயே, நாரண துரைக்கண்ணன், அவர் ஆசிரியராகப் பணியாற்றிய பிரசண்ட விகடன் மாதம் இருமுறைப் பத்திரிகையில் தொடர்ச்சியாக நாவல்கள் எழுதி, வாசகர்களிடம் செல்வாக்கு பெற்று இருந்தது குறிப்பிட வேண்டியது ஆகும் ஆரம்பத்தில் ஆங்கில நாவல்களைத் தழுவிய தொடர் கதைகளையே அவர் எழுதினார். அவை வாசகர்களுக்கு மிகுதியும் பிடித்திருந்தன.

"நான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்? இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்' 'சீமாட்டி கார்த்தியாயினி” போன்ற தழுவல் நாவல்களுக்குப் பிறகு, சமூகம், காதல் மற்றும் பெண் உள்ளத்தின் பிரச்சனைகள் முதலியவற்றை அடிப்படையாக்கி அவர் உயிரோவியம்' "தாசி ரமணி’ போன்ற நாவல்களை உருவாக்கினார். நாரணதுரைக் கண்ணனின் படைப்புகள் கிராமங்க ளில் இருந்த சாதாரண வாசகர்களையும் க வர் ந் தி ரு ந் தன . ஆந்நாட்களில்,

"கல்கி ஆனந்த விகடனில் கள்வனின் காதலி' என்ற விறுவிறுப்பான சம்பவங்கள் நிறைந்த சமூக

இ வாசகர்களும் விமர்சகர்களும் 38