பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை

இது தமிழில் ஒரு வித்தியாசமான புத்தகம். தமிழ் நாட்டின் வாசகர்கள், அவர்களது இயல்புகள் பற்றிய கண்ணோட்டமாகவும், தமிழ் விமர்சகர்கள் பற்றிய விமர்சனமாகவும் இப்புத்தகத்தின் பகுதிகள் எழுதப்பட்டிருக்கின்றன.

சோலைத் தேனி வெளியிட்டுள்ள எனது முந்தைய புத்தகத்தில் கூறியுள்ளபடி, முதலில் நான் ஒரு வாசகன். ஒரு இலக்கியவாதி. அத்தன்மையில் ஐம்பது வருடங் களுக்கும் மேலாகவே நான் கண்டு உணர்ந்த உண்மை களையும் மனப்பதிவுகளையும் இங்கே தொகுத்துத் தந்திருக்கிறேன்.

"எழுத்தாளர்கள், பத்திரிகைகள் - அன்றும் இன்றும்’ என்ற புத்தகத்துக்குப் பிறகு தமிழ் நாட்டின் வாசகர்கள், விமர்சகர்கள் குறித்தும் நான் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று திரு. தி, க. சிவசங்கரனும், திரு. ஆர். டி. ராஜனும் என்னை கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு என் நன்றி.