பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறண்ட, சோகமான, இருண்ட வாழ்வு நிலைமைகளைக் கூட அழகான முறையில்- கவிதைத் தன்மையோடு- எழுதினார் காண்டேகர். நாவல்களின் பெயர்கள் கூட கவிதைநயம் கொண்டிருந்தன.

வெறும் கோயில், சுகம் எங்கே?, கருகிய மொட்டு,

எரிநட்சத்திரம், கிரவுஞ்சவதம், வெண்முகில்- இவை சில.

வறுமையால் தவித்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டோர், விதவைகள், அடிமை நிலையில் உள்ள பெண்கள் முதலியவர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை காண்டேகர் நாவலில் தொட்டுக் காட்டினார். அவற்றை மினுமினு முலாம் பூசிய சுகமான நடையிலே எழுதினார். காதல் உறவுகளையும் செக்ஸ் உணர்வுகளையும் முத ன் மை ப் படுத் தி ஜிலுஜிலுப்பாகச் சித்திரித்தார். இந்தப் போக்கு வாசகர் களுக்குப் பிடித்திருந்தது. எனவே, காண்டேகர் தாவல்கள் பெரும்பலரால் விரும்பிப் படிக்கப்பட்டன.

காண்டேகர் பாணியில் தமிழில் பல நாவல்கள் தோன்றலாயின. உருவம், உத்தி, உள்ளடக்கம் ஆகிய வற்றில் காண்டேகரைப் பின்பற்றி தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் ஒரு சில நல்ல வரவேற்பைப் பெற்றன. பேரும் அளவில் கவனிப்பைப் பெற்ற நாவல் தொ. மு. சி, ரகுநாதன் எழுதிய முதல் இரவு ஆகும்,

முதல் இரவு நாவல் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது எ ன்பது ம் குறிப்பிடப்பட வேண்டிய

தகவல் தான்.

வாசகர்களும் விமர்சகர்களும் 42