பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காண்டேகரின் தாக்கமும் பாதிப்பும் பெற்று. நாவல்கள் எழுதத் தொடங்கி நல்ல வெற்றி கண்டவர் பேராசிரியர் மு. வரதராசன் ஆவார்.

மு. வ. முதலில் பேரறிஞர் பெர்னாட்ஷா நூல்களின் தாக்கத்தினால் கி. பி. 2000 என்ற நாவலை எழுதினார். அவருக்கு காண்டேகா பாணி, தாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு நல்ல உத்தி என்று தோன்றியிருக்க வேண்டும். எனவே, காண்டேகரின் வழிமுறைகளை அவரும் கையாண்டார்

எனக் கூறலாம்.

கதை மாந்தரே அவரவர் கதையைச் சொல்வது; ஆண் பெண் இல்லற வாழ்க்கையில் ஏற்படும் பிணக்குகள், உணர்ச்சிக் குழப்பங்கள்; வறுமைப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் வாழ்க்கைப் பிரச்னைகள், சீர்திருத்தக் கருத்துக்கள் முதலியவற்றைக் கொண்ட சிந்தனை நாவல்களை மு. வ. எழுதினார்.

மு. வரதராசனாரின் எழுத்துக்களும் ஒரு பதினைந்து அல்லது இருபது ஆண்டு காலம் த மி ழ் வாசக உலகில் பேராதரவைப் பெற்றிருந்தன. முக்கியமாக, மாணவர்களும் இளைஞர்களும், தமிழ் ஆசிரியர்களும் மு. வ. வின் எழுத்துக்களை விரும்பிப் படித்தார்கள்.

மு. வ. வின் புத்தகங்கள் வசீகரமான வர்ணங் களையும் கவர்ச்சிப் படங்களையும் கொண்ட அட்டை களோடு தயாரிக்கப்படவில்லை. வெறும் எழுத்துக்களாலான

வாசகர்களும் விமர்சகர்களும் 43