பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புத்தகத் தலைப்பும் சாதாரண (சித்திரம் எதுவும் இல்லாத) அட்டையுமே மு. வ. வின் நாவல் களும், கட்டுரைகளும் பெற்றிருந்தன. அவருடைய எழுத்துக்கும் எண்ணங்களுக்குமாகவே வாசகர்கள் மு. வ. வின் புத்தகங்களை வாங்கினார்கள். தமிழ் புத்தக உலகில் இது ஒரு சாதனையேயாகும்.

மு. வ. வின் புத்தகங்கள் பெரும் அளவில்

விற்பனையானதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு.

பெரியார் ஈ. வெ. ராமசாமியின் இயக்கம் வேக வளர்ச்சி பெற்று வந்தது. அதன் உந்து சக்தியாக சி. என். அண்ணாதுரை விளங்கினார். அவருடைய செல்வாக்கும் தாக்கமும் மக்களிடையே வலுப்பெற்று வளர்ந்து கொண்டிருந்தன. அவர் சகல துறைகளிலும் நிலவிய பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும் "தமிழருக்கு ஆதரவு பற்றியும் பிரசாரம் செய்து வந்தார். அந்த ரீதியில் மு. வ. எழுத்துக்களுக்கும் அண்ணாதுரை பெரும் அதரவு அளிக்க முன்வந்தார். தமிழர் ஒருவர் தலைசிறந்த நாவல்களையும், சீரிய சிந்தனைக் கருத்துக் களைக் கூறும் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருப்பதை அவர் பாராட்டிப் பேசியதோடு, மு , வ - வின் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும் என்றும் பிரசாரம் செய்தார். மு. வ. வின் நூல்களை தமிழர்கள் வாங்கிப் படிப்பதோடு நின்று விடக் கூடாது; அப்புத்தகங்களை வாங்கி மற்றவர்களுக்கு பரிசாக வழங்க வேண்டும்; எவர் வீட்டில் எந்த விசேடம்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 44