பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற (ஃபிக்ஷன்') படைப்பிலக்கியங்கள் பெங்குவின் புக்ஸ் என்றும், அறிவியல் நூல்கள் பெலிக்கன் வெளியீடுகள் என்றும் வந்தன. மிகவும் பயனுள்ள புத்தகங்கள். வாசகர்கள் விரும்பி வாங்கிப் படித்த வெளியீடுகள் அவை. (கால ஒட்டத்தில் அவற்றின் விலையும் உயர்ந்து போயிற்று.

அவை போன்ற தரமான, நல்ல புத்தகங்களைப் பிரசுரித்து, குறைந்த விலையில் தமிழ் வாசகர் களுக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தார். வை. கோ.

ஆரம்ப காலத்தில் சக்தி வெளியீடுகள் பெங்குவின் புத்தகங்கள் மாதிரியான அட்டை அமைப்புடனேயே பிரசுரிக்கப்பட்டன. டால்ஸ்டாய் கதைகள், கட்டுரைகள்: மற்றும் ஏ, கே. செட்டியாரின் பயனக் கட்டுரைகள் விக்டர் ஹ்யூகோவின் புகழ் பெற்ற நாவலான லே மிஸ்ரபிள்ஸ்’ தமிழாக்கமான ஏழை படும் பாடு’, மற்றொரு பிரெஞ்சு நாவல் இளிச்சவாயன் - இப்படி எத்தனையோ புத் த கங் க ள் ஆரம்பத்திலேயே வெளியிடப்பட்டன.

'ஏழை படும் பாடு சுத்தானந்த பாரதியால் எழுதப்பட்டது. நேரான மொழி பெயர்ப்பு அல்ல. லே மிஸ்ரபிள்ஸ் கதையை இவர் தனது போக்கில் சுவாரஸ்யமாக எழுதியிருந்தார். அது மிகுதியான ரசிகர்களை ஈர்த்தது.

வாசகர்களும் விமர்சகர்களும் 47