பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*சக்தி காரியாலயம் வெ. சாமிநாத சர்மாவின்

அரசியல் தத்துவ நூல்களையும் உயர்ந்த முறையில் பிரசுரித்தது. பிளாட்டோவின் அரசியல்’, ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம்', 'கார்ல் மார்க்ஸ்’ முதலிய புத்தகங்கள் குறிப்பிடத் தக்கவையாக விளங்கின . அரசியல் ஆர்வம் மிகப் பெற்றிருந்த - ஆங்கிலப் பயிற்சி பெற்றிராத - பலப்பலர் அரசியல் தத்துவங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இத்தகைய சக்தி வெளியீடுகள் பெரிதும் உதவின.

வை. கோ. சக்தி என்ற நல்ல பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். இந்த மாத இதழ் டைஜஸ்ட்' பாணியில், உலகத்து விஷயங்கள் பலவற்றையும் பற்றிய கட்டுரைகளையும், மொழி பெயர்ப்புகளையும், ஒன்றிரு கதைகளையும், பல துணுக்குகளையும் கொண்டு, வாசகர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தது. சக்தி' அழகிய முறையில் அச்சிடப்பட்டு ரசிகர்களை மகிழ்வித்தது.

சக்தி காரியாலய அதிபர் வை. கோவிந்தன், தனி நபர்கள் புத்தகங்கள் வாங்குவது பற்றிப் பெருமை யோடு குறிப்பிடுவது வழக்கம். புதிய புத்தகங்கள் பற்றி விரிவான மதிப்புரைகள் வர வேண்டும் என்று கூட எதிர்பார்க்கப்படுவதில்லை. ஹிண்டு’ நாளிதழில் 'வரப்பெற்றோம்' ('புக்ஸ் ரிஸிவ்ட்') என்ற பகுதியில் இரண்டு வரிகள் வெளிவருவதைப் பார்த்து விட்டு புத்தகங்களுக்கு ஏகப்பட்ட ஆர்டர்கள் வருகின்றன; வி. பி. தபால் மூலம் புத்தகங்களை வரவழைப்பவர்கள்

வாசகர்களும் விமர்சகர்களும் 48