பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெங்கிருந்தெல்லாமோ கடிதங்கள் எழுதுகிறார்கள் என்று அவர் சொல்வார்.

நாட்டு மக்களிடையே இது ஒரு நல்ல பண்பாக இருந்தது, அந்நாட்களில்:

அரசியல், சமூக சீர்திருத்தக் கட்சிகளும் இந்தப் போக்கை ஊக்குவித்தன.

சாதாரண மக்கள் கூட நாட்டு நடப்புகளையும் அரசியல் விஷயங்களையும் அறிந்து கொள்ள ஆசைப் படுவது இயல்பு. கட்சித் தலைவர்களின் சொற்பொழிவு களைக் கேட்பதில் அநேகர் திருப்தி அடைந்து விடுகிறார்கள். கட்சியைச் சேர்ந்தவர்களின் Gಆಹಹಹಹ.ರ್ಛಾ வெளியிடும் பத்திரிகைகளைப் படிப்பதன் மூலம் தங்களது அறியும், அவாவைத் தனித்துக் கொள்கிறவர்கள் மிகப் பலராவர்.

தேசீய விடுதலைப் போராட்டம் வெகுஜன இயக்கமாக உருப்பெற்று வளர்ந்த 1930 களில், நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளையும், தலைவர்களின் கருத்துரைகளையும் மற்றும் எழுச்சியூட்டும் எண்ண்ங் களையும் மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காகப் பலபல பத்திரிகைகளும், சிந்தனைப் பிரசுரங்களும் GమితF5 வந்தன. அவற்றை வாங்கிப் படிப்பதிலும், உற்சாகத் & தோடும் உணர்ச்சி வேகத்துடனும் உரக்க வாசித்துக் காட்டுவதிலும் பலர் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் அடைவது

வழக்கமாக இருந்தது.

வாசகர்களும் விமர்சகர்களும் 49