பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழில் வித்தியாசமான புத்தகங்களை - தனிமனிதப் பண்பாட்டு உயர்வுக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உதவக் கூடிய சிந்தனை நூல்களை - துணிந்து வெளியிடும் அமைப்பாக சோலைத் தேனி செயல்படுகிறது. அதன் ஆசை நிறைந்த திட்டங்கள் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுக என வாழ்த்துகிறேன்.

இருட்டு. சூழ எங்கினும் இருட்டு என்று புலம்பிக் கொண்டிருப்பதை விட, சிறிதளவு வெளிச்சமேனும் பரப்பக்கூடிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது நற்பணி ஆகும்.

அந்த எண்ணத்தோடு தான் இந்தப் புத்தகம்

எழுதப்பட்டிருக்கிறது.

வல்லிக் கண்ணன்