பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1940 களில் தேசீயக் கட்சியின் பத்திரிகைகளும் பிரசுரங்களும் மட்டுமே மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. தேசீயக் கட்சியினரின் கொள்கை களுக்கும் நோக்குகளுக்கும் மாறுபட்ட - எதிர்ப்பான - போக்குகளைக் கொண்ட கட்சிகளின் தாக்கமும் ஆதிக்கமும் நாட்டில் வலுப்பெற்று வந்தன.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுக் கட்சியும் திராவிடர் கழகமும் வீறுடன் வளர்ந்து கொண்டிருந்தன.

கம்யூனிஸ்டுக் கட்சி சர்வதேசப் பார்வை, உடையது; உலகப் பேரியக்கமாக வளர்ச்சி பெற்ற அதன் அங்கமாகத் தான் இந்தியாவிலும் - தமிழ் நாட்டிலும் அது செழித்துத் தழைத்தது.

கம்யூனிஸ்டுகள், மார்க்சிய தத்துவ நூல்களைப் படித்து அரசியல் அறிவு பெற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்காக வகுப்புகள்’ நடத்தப்பட்டன.

கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டார்கள். இவற்றில் அநேகம் தமிழில் வெளி வந்தன. அவற்றையும் கட்சிப் பத்திரிகை களையும் விரும்பிப் படிக்கும் வாசகர்கள் பெருகினார்கள்.

அரசியல் தத்துவ நூல்களோடு, முற்போக்குச் சிந்தனைகளை எடுத்துக் கூறும் அறிவியல் நூல்களும், இலக்கியங்களும் (நாவல்கள், கதைகள், கவிதைகள் $.

இ வாசகர்களும விமர்சகர்களும் 50