பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள்) தமிழில் வெளியிடப்பட்டன. ஆவற்ஆக்கும் வாசகர்கள் அதிகமாகவே கிடைத்தார்கள்.

ரஷ்ய நாவல்களும் சிறுகதைகளும் கவிதை நூல்களும் - ஆங்கிலத்திலும் தமிழிலும் - வாசகர் களுக்குப் பரவலாக அறிமுகமாயின.

ம த் தி ய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், தொழிலாளர்களும் ஆர்வத்தோடு படிக்கும் வாசகர்கள் ஆயினர்.

அதே காலத்தில் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பிரசாரம் செய்யும் திராவிடர் கழக வெளியீடுகளுக்கும் வாசகர்கள் பெருகி வளர்ந்தார்கள். பெரும்பாலும், சமுதாயத்தின் அடிநிலையில் உள்ளவர்கள்.தாழ்த்தப்பட்டு, வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட திலையிலே இருந்த இங்ைகளைச் சேர்ந்தவர்கள். பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்கள். ‘விடுதலை’ பத்திரிகையை விரும்பிப் படித்தார்கள். பெரியார் ராமசாமி, அண்ணாதுரை மற்றும் இவர்கள் வழி வந்தவர்களது எழுத்துக்களுக்கு வ | ச க ர் க ள் பெருகினார்கள்.

இக்கட்சியினரின் ஆதரவுப் பிரசாரத்தின் பயனாக பாரதிதாசன் கவிதைகளை ரசித்துப் ; படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

கவி பாரதிக்கு அவரது வாழ்நாளில் போதுமான கவனிப்பு கிட்டியது இல்லை; அவர் இறந்ததுக்குப் பின்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 51