பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


போலவே, அவரைப் பின்பற்றிக் கவிதை எழுதத்

தொடங்கியவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்தது. :பாரதிதாசன் பரம்பரை' என்று சொல்லி, பாரதிதாசனை போலவே கவிதைகள் எழுதிப் பெருமைப்பட்டுக்

கொண்டனர் பலர். இவர்களில் திறமை உடைய ஒரு

சிலர் தனித்தன்மை காட்டிப் பெயர் பெற்றார்கள்.

ஈ. வெ. ரா. பெரியாரின் திராவிடக் கழகம்’ தனி அமைப்பாகவும், அதிலிருந்து பிரிந்து சென்ற சி. என். அண்ணாதுரையும் அவரைச் சேர்ந்தவர்களும் அமைத்துக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம்’ தனி இயக்கமாகவும் ഖണ് : 65rL కత్విత, - இவ் அமைப்புகளைச் சார்ந்த பத்திரிகைகளின் எண்ணிக்கையும்

அதிகரித்தது.

இக்கழகங்களின் பெயர் பெற்ற பிரசார கர்

மேடைப்பிரசங்கி - ஒவ்வொருவரும் தத்தமக்கென்று தனித் தனிப் பத்திரிகைகள் நடத்தினார்கள். சிறிது காலத்துக்கு அவை வாசகர்களின் ஆதரவைப்

பெறவும் செய்தன.

எனினும், பல வருடங்களாகவே அண்ணாதுரை வெளியிட்டு வந்த 'திராவிட நாடு’ பத்திரிகை பெற்றிருந்த செல்வாக்கையும் சர்குலேஷனையும் இதர இதழ்கள் பெற முடிந்ததில்லை.

மோனை ந ய ம் நிறைந்த அடுக்கு மொழி நடையை அண்ணாதுரை அழகுறக் கையாண்டார். அவர் வலியுறுத்த விரும்பிய சிந்தனைகளை தெளிவாகவும்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 53