பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அழுத்தமாகவும் எடுப்பாகவும் வெளியிட்டார். அவருடைய எண்ணங்களும் எழுத்துக்களும் முன்னேறத் துடித்த இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டின. அவரைப் போலவே சிந்திக்கவும் எழுதவும் பல பேரைத் தூண்டின.

எனவே, மதப் புரட்டுகள் பற்றியும், புராண அளப்புகன் குறித்தும், கடவுளர் லீலைகள் சம்பந்தமாகவும், ஆரிய சூழ்ச்சி பற்றியும் பெரும் அளவில் கட்டுரைகளும் சிறு சிறு புத்தகங்களும் வெளி வந்தன. அவை அனைத் தையும் விருந்து எனச் சுவைத்து மகிழ்ந்தார்கள் ஆயிரக்

கணக்கான வாசகர்கள்.

கடவுளர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, மூடநம்பிக்கைகள் எதிர்ப்புகள், புராணங்கள் எதிர்ப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்து வளர்ந்த திராவிட இயக்கங்கள் திண்டாமை ஒழிப்பு, விதவைகள் துயர் ஒழிப்பு. அறியாமை ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தின. காதல் மணம், கலப்புத் திருமணம், பகுத்தறிவு வளர்ச்சி முதலியவற்றை ஆதரித்தன.

இவற்றை மையமாக்கி எழுதப் பெற்ற கதைகள், கட்டுரைகள், நாவல்கள் எல்லாம் அவ்இயக்கப் பேச்சாளர்களின் சொற்பொழிவுகளினால் வசீகரிக்கப் பட்டிருந்த எண்ணற்ற மக்களுக்குப் பிடித்துப் போயின.

கசப்பான மாத்திரைகளுக்கு இனிப்பு பூசிக் கொடுப்பது போல,அண்ணாதுரை சாதாரண வாசகர்களை

இ வாசகர்களும் விமர்சகர்களும் 54