பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அதிகம் கவர வேண்டும் என்பதற்காக, தனது சிந்தனை đ56Ờ$ff எழுத்தாக்கும் பணியில் கவர்ச்சிகரமான ஒரு உத்தியைப் பெரிதும் கையாண்டார். காமரசத்தை தாராளமாகக் கலந்து கொடுக்கும் முறை தான் அது.

தேவலீலைகளை விவரிக்கின்ற வகையிலும், திமிர்பிடித்த பூசாரிகள், குருக்கள், மதவாதிகளின் போலித்தனங்களை அம்பலப்படுத்துகிற சாக்கிலும், மன்னர்களின் அந்தப்புரக் களியாட்டங்களை சுட்டிக் காட்டுகிற விதத்திலும், ஆண் பெண் காம உறவுகள் பற்றி அவர் அதிகமாகவே எழுதினார். தேவலீலைகள், ரோமாபுரி ராணிகள் போன்ற கட்டுரைகள் இதற்கு நல்ல சான்றுகள் ஆகும்.

கம்ப ராமாயணத்தின் சிறப்புகளை, அதன் பாத்திரப் படைப்புகளை, கவிதை நயங்களை எல்லாம் ஆய்வதை ஒதுக்கி விட்டு, காம விவரிப்புப் பாடல்களைப் பொறுக்கி எடுத்து, கம்பரசம் - டோஸ் ஒன்று, டோஸ் இரண்டு என்று சுவையாக வர்ணித்து எழுதினார்.

இவற்றாலும் திராவிட நாடு வாசகர்களின் எண்ணிக்கை கூடியது. பின்னர் அவை எல்லாம் தனித்தனிப் புத்தகங்களாக வெளிவந்ததும் நல்ல விற்பனையைப் பெற்றன.

சமுதாயச் சி ற் பி க ைள யு ம், மனிதகுல முன்னேற்றத்துக்காகப் பஈடுபட்ட அறிஞர்களையும், அவர்கள் தம் வாழ்நாளில் அனுபவிக்க நேர்ந்த இன்னல்களையும் விவரித்து விறுவிறுப்பான நடையில்

வாசகர்களும் விமர்சகர்களும் 55