பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் எழுதினார். அவற்றின் மூலம் வாசகர்களின் அறிவுத் தாகத்தை வளர்த்து, புதிய புதிய விஷயங் களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவாவைப்

பல பேரிடம் உண்டாக்கினார்.

எமிலி லோலா, ரூலோ, வால்டேர், அமெரிக்கக் கவி வால்ட் விட்மன், நாத்திகச் சிந்தனையாளர் இங்கர்சால் போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகள் அண்ணாதுரையால் எழுதப்பட்டன. அவற்றில் அவர்

கையாண்ட வசீகர நடை வாசகர்களை வெகுவாகக்

கவர்ச்சித்தது.

உணர்ச்சி வேகமும், 'சிந்தனை கனமும், விறுவிறுப்பான நடையும் கொண்ட புத்தகங்கள்

வாசகர்களை எளிதில் ஈர்த்தன என்பதற்கு அக்கால கட்டத்தில் வெளிவந்து எளிதில் விற்பனையான சிறு சிறு பிரசுரங்களின் பெருக்கம் ஒரு அளவாக அமையும்,

கோரநாதன் என்ற புனை பெயரில் வல்லிக் கண்ணன் எழுதிய சிறு புத்தகங்களில் கோயில்களை மூடுங்கள் என்பதும் ஒன்று. அது வெளிவந்த

பதினைந்து இருபது நாட்களிலேயே ஆயிர்ம் பிரதிகளும் விற்பனையாகி விட்டன. இரண்டாம் பதிப்பாக அச்சிடப்பட்ட ஆயிரம் புத்தகங்கள்

இரண்டு மாதங்களில் தீர்ந்து போயின. மூன்றாவது பதிப்பாக, உடனடியாக, மேலும் ஆயிரம் பிரதிக்ள்

வாசகர்களும் விமர்சகர்களும் 56