பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அச்சிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவையும் வேகமாகவே விலை போயின.

புதுமைக் கருத்துக்களை, உரிய முறையில் எழுதிப் புத்தகமாக்கி, நியாயமான விலையில் விற்றால், அவற்றை வாங்கிப் படிக்க ஆர்வமுள்ள வாசகர்கள் தயாராக இருந்தார்கள்.

ஆனால், நடைமுறை உண்மையின் ஒரு பக்கப் பசுமைத் தோற்றம் தான் இது. அந்த உண்மையின் இருண்ட பகுதி உணர்த்துவது உற்சாகம் தரக்கூடிய ಅಹಮಿಖTಹ இராது.

புதுமையான விஷயங்கள், சோதனை ரீதியான எழுத்துக்கள், உள இயல் உணர்வியல் உண்மைகளை எடுத்துக் கூறும் கற்பனைப் படைப்புகள், ரகம் ரகமான எழுத்து நடைகள் இவற்றைக் கொண்ட ஆழ்ந்த இலக்கிய முயற்சிகள் (விரியஸ் லிட்டரேச்சர்) பலவும் வாசகர்கள் மத்தியில் போதிய கவனிப்பைப் பெற முடியாமல் தான் இருந்தன.

1930 களில் மணிக்கொடி என்ற சிறுகதை இலக்கியப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் போதுமான ஆதரவைப் பெற முடியாமல் போனது போலவே, ‘சூறாவளி’ என்ற புதுமை இதழும் வாசகர் ஆதரவை அடைந்து வளர இயலாமல் மறைந்து போக நேர்ந்தது.

'மணிக்கொடி’ பத்திரிகையின் தாக்கத்தினாலும் மணிக்கொடி எழுத்தாளர்களின் பாதிப்பாலும் உத்வேகம்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 57