பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெற்ற இளைஞர்கள், 1940 களில் ஆசையோடு தொடங்கிய ஆர்வ முயற்சிகள் பலவும் அதே கதியைத் தான் அடைந்தன.

திருச்சியிலிருந்து வெ ளி வ ந் த கலாமோகினி' திருச்சி அருகில் உள்ள துறையூரிலிருந்து பிரசுரமான "கிராம ஊழியன்’, கும்பகோணத்திலிருந்து வந்த தேனி’ ஆகிய மறுமலர்ச்சி இலக்கிய இதழ்கள், புதுமையான, ஆத்த்த சோதனை ரீதியில் அமைந்த சிறுகதைகளையும் கட்டுரைகளையும் கொண்டிருந்தன. அவை ஆயிரம் பிரதிகள் விற்பனையாவது கூட சிரமமாக இருந்தது.

சென்னையில் பிரசுரமான சந்திரோதயம் மாதமிரு முறைப் பத்திரிகையும் மறுமலர்ச்சி இலக்கிய ஏடு ஆகவே விளங்கியது. அதுவும் அதிகமான வாசகர்களை எட்ட இயலவில்லை.

எனினும், இப்பத்திரிகைகளுக்கு அங்கங்கே தரமான வாசகர்கள் இருக்கத்தான் செய்தார்ள். அவர்கள் எண்ணிக்கை இருநூறு அல்லது முந்நூறு தான் இருக்கும்.

பேராசிரியர் அ. சீனிவாசராகவன் ஆசிரியராக இருந்து நடத்திய 'சிந்தனை மாத இதழும் வை. கோவிந்தன் பிரசுரித்த சக்தி மாசிகையும், தரமான விஷயங்களைத் தாங்கி வந்த நல்ல பத்திரிகைகள் தான். அவையும் பல் லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கவில்லை.

'கலைமகள் ஒரளவுக்குப் பரவலான வாசகர்

வட்டத்தைக் கொண்டிருந்தது.

வாசகர்களும் விமர்சகர்களும் 58