பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விரிவான விமர்சனங்கள் எழுதினார்கள். சுவையாகவும்: காரமாகவும், கிண்டலாகவும், கடுமையாக விமர்சித்தும் எழுதினார்கள். அவை வாசகர்களுக்குப் பிடித்திருந்தன.

சகலவிதமானவர்களும் சினிமாவினால் வசீகரிக்கப் பட்டார்கள். சினிமா பற்றிய தகவல்கள், பல் ரக விஷயங்கள், படவிமர்சனங்கள் முதலியவற்றில் அதிகமான ஆர்வமும் அக்கறையும் காட்டுகிற போக்கு வருடத்துக்கு வருடம் வளர்ந்து வந்தது.

ஜனங்களின் இந்த இயல்பைப் புரிந்து கொண்ட் பத்திரிகைக்காரர்கள் மக்களின் மனத்தினவுக்குத் தீனிபோடுகிற வகையில் செய்திகளையும், சுவைம்ான தகவல்களையும், நடிகர்கள் நடிகையரது வரலாறுகளையும் பேட்டிகளையும் தாராளமாகவே தரலானார்கள்.

வாரப் பத்திரிகைகள் சினிமா அனுபந்தங்களை இணைத்து வெளியிட்டன. சினிமா விளம்பரங்கள் மூலம் பத்திரிகைகளின் வருமானம் பெருகியது. அதனாலும், படத்தயாரிப்பாளர்களை திருப்திப்படுத்துவதற்காகவும், அ வர் களது தய வை எதிர் பார்த்தும் அனைத்துப் பத்திரிகைகளும் சினிமாச் செய்திகளையும், பட விமர்சனங்களையும் விரும்பிப் பிரசுரித்துக் கொண்டு இருந்தன.

ສົດຕົurມໍ பத் திரிகைகளும் புது சு புது சாகத் தோன்றின. அவை அழகான வர்ண அட்டைகளையும்,

உள்ளே வழவழப்பான் ஆர்ட்பேப்பரில் நடிகைகள்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 60