பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நடிகர்களது கலர் படங்களையும் வெளியிடுவதில்

ஆர்வம் காட்டின.

வாசகர்கள் அத்தகைய பத்திரிகைகளையே விரும்பி

வாங்கினார்கள்.

"இலக்கியப் பத்திரிகைகள் கூட, பத்திரிகைச் சந்தையில் இடம் பிடிப்பதற்காகவும், வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாகவும், இதழ் தோறும் சினிமாவுக்கென்று சில பக்கங்களை ஒதுக்கின. திரைப்படக் காட்சிகளைச் சித்திரிக்கும் ஸ்டில்போட்டோக் களை பிளாக் செய்து அச்சிட்டன. பட விமர்சனங்களை வெளியிட்டன,

புகழ் வெளிச்சம் பெற்று விடுகிற பிரபலஸ்தர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் ஜனங்களுக்கு இயல்பாகவே ஒரு அவா உண்டு, அத்தகைய செய்திகளைப் பேசி மகிழ்வதில். அவர்கள் தனி இன்பம் காண்கிறார்கள்.

ஜனங்களின் இந்த இயல்பைப் புரிந்து கொண்ட சிலர், பெரிய மனிதர்களைப் பற்றிய வம்புகள், வதந்திகள் கிளுகிளுப்புச் செய்திகள், கிசுகிசுத் தகவல்கள் முதலிய வற்றை அச்சிட்டு, சுலபத்தில் பணம் பண்ண ஆசைப் படுகிறார்கள். துணிச்சலாக எழுதி, பரபரப்பு உண்டு பண்ணுகிறார்கள்.

இந்த விதமான அக்கப்போர் பத்திரிகைகள் மஞ்சள் பத்திரிகை’ என்று குறிப்பிடப்படுகின்றன.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 61