பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1943-44ல் தமிழில் மஞ்சள் பத்திரிகை மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லட்சுமிகாந்தன் என்பவர்.

முதலில் சினிமா தூது’ என்ற பத்திரிகை மூலம் சினிமா உலகப் பிரபலஸ்தர்கள் பற்றிய வம்புகளை அவர்களுடைய அந்தரங்க லீலைகள் பற்றிய செய்தி களை, வெளிப்படையாக எழுதிப் பரப்பினார்.

பிறகு, உயிர் வாழ்வதற்குப் போராடிக் கொண்டு இருந்த இந்து நேசன்' என்ற பத் திரிகையை சொந்தமாக்கிக் கொண்டு அவர் தன் இஷ்டம் போல் சினிமா வட்டார வம்புகளை தனி பாஷையில் வெளி இட்டார். நட்சத்திரப் புகழ் பெற்ற * நடிகைகள் நடிகர்கள். வெற்றி பெற்ற பட அதிபர்கள் பற்றி எல்லாம் கண்டபடி எழுதினார். பத்திரிகை மூலம் எச்சரிக்கைகள் விடுத்தார். பிளாக் மெயில் பண்ணி' பணம் சம்பாதிப்பதும் அவருடைய நோக்கமாக இருந்து இருக்கலாம்.

ஒட்டல் ஜல்ஸா க்கள் பற்றியும், இரவுக் கேளிக்கைகள் பற்றியும் சுவையாகச் செய்திகளைத் தரத் தொடங்கிய இந்து நேசன் சுடச் சுட விற்பனை ஆகும் சுவையான பண்டங்கள் போல் சூடாக விலை போனது. வேறு எந்தப் பத்திரிகையும் கண்டிராத அளவு வரவேற்பை அது வாசகர்களிடம் பெற்றது.

இரண்டனா விலை உள்ள அந்தத் தாளை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிப் படிக்கக் காத்துக் கிடந்தார்கள் வாசகப் பெருமக்கள்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 62