பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1942 - ல் தொடங்கினார். அதில் பார்த்திபன் கனவு’ என்ற சரித்திர நாவலைத் தொடர்கதையாக எழுதினார்.

அது அவருடைய நேர்க்கத்தை நிறைவேற்றியது. எனினும், கல்கியின் இரண்டாவது சரித்திர நாவலான -சிவகாமியின் சபதம் தான் பெரும் வெற்றியாகத் திகழ்ந்தது. மிக அதிகமான வாசகர்களை சொக்க வைத்தது அது.

நம் நாட்டு மக்களுக்கு ராஜா ராணி கதை' என்றாலே ஒரு தனி மோகம். எந்தக் காலத்திலும், எந்த வயதினரும், ராஜா ராணிகள் சம்பந்தமான கதையை, ஆடம்பரமான அரண்மனை நடவடிக்கைகளை, அழகுமயமான நந்தவனத்தில் அவர்கள் நடந்து கொள்கிற கோலாகலங்களை எல்லாம் அறிந்து கொள் அதில் அவர்களுக்கு விசேஷமான ஆர்வம் உண்டு. இந்த ரீதியில், தமிழின் முதலாவது நாவல் என்று சொல்லப்படுகிற பிரதாப முதலியார் சரித்திரம்: என்பதை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அந்த நாவலின் முன்னுரையில் கூறியிருக்கிறார்.

அது சரிதான். மக்களின் இந்த ருசியை நன்கு புரிந்து வைத்திருந்த ஆசிரியர் கல்கி, அதற்கு ஏற்ற தீனி கொடுத்து, தனது பத்திரிகையின் வளர்ச்சிக்கு வழி செய்து கொண்டார். கல்கியின் சரித்திர நாவல்கள் பல்லாயிரக்கணக்கான் வாசகர்களை வசீகரிக்கும் சாதனமாக அமைந்தன. தொடர்கதையாகப் பிர, அவற்றை சேர்த்து, சைண்டு செய்து வைத்துக்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 7:0