பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அதிகம் அதிகமாக வரத் தொடங்கி விட்டதால், ஒரு எழுத்தானரின் தொடர்கதைக்காகவே நடத்தப்படும் மாதப் பத்திரிகை மீது இயல்பாகவே வாசகர்களுக்கு ஆர்வம் இல்லாது போயிற்று என்று சொல்லலாம்.

பத்திரிகை உலகில் 1940 களில் ஒரு புதிய பிறப்பு

தலைகாட்டுவது காலத்தின் கட்டாயமாயிற்று.

"மாதம் ஒரு புத்தகம்’ என்பது தான் அது.

இரண்டாவது உலக மகாயுத்தம் நடைபெற்ற காலம், காகிதக் கட்டுப்பாடு அமுலில் இருந்தது. புதிதாகப் பத்திரிகைகள் ஆரம்பிப்பதற்குத் தடை இருந்தது. "சட்டத்தில் ஒட்டை' கண்டு, தங்கள் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரக்கூடிய சாமர்த்தியசாலிகள்

எப்போதும் இருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள், காகிதக் கட்டுப்பாடு - பத்திரிகைத் தடை இவைகளுக்கு உட்படாத விதத்தில் செயல் புரிவதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள். பத்திரிகை என்று இல்லாமல், புத்தகம் போலவும் இல்லாது, மலர்' என்று தொகுப்பு வெளியீடு தயாரிக் கலாம்; அதை மாதம் ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று கண்டார்கள்.

இப்படி வெளியிடப்படுகிற புத்தகம் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் எல்லாவற்றையும் கொண்டிருக்கும். பத்திரிகை போல் குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு ஒழுங்காகப் பிரசுரமாகும். ஆயினும்,

இ வாசகர்களும் விமர்சகர்களும் 74