பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பத்திரிகை மாதிரி தலையங்கம், செய்தி விமர்சனம், செய்திகள் முதலியனவற்றைக் கொண்டிராது.

இத்தன்மையில் தமிழில் மு. த ன் மு. த லாகத் தோன்றியது குமரி மலர்' என்ற மாதம் ஒரு வெளியீடு. அதை ஆரம்பித்து, வெற்றிகரமாக நடத்தியவர்

ஏ. கே. செட்டியார்.

அவர் உலகம் சுற்றும் தமிழன்’ என்று பெயர் பெற்றிருந்தார். தனித்தனிப் பயணக் கட்டுரைகள் எழுதி வாசகர்களைக் கவர்ந்திருந்தார். அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் உலகம் சுற்றும் தமிழன்' என்ற பெயரில் சக்தி வெளியீடு ஆக வந்து நல்ல கவனிப்பை அடைந்திருந்தது. அடுத்ததாக அவர் எழுதிய ஜப்பான் என்ற புத்தகம், சக்தி வெளியீடாக வந்து, அன்றைய ஆட்சியினரால் (பிரிட்டிஷ் சர்க்கார்) தடை செய்யப் பட்டிருந்தது. அவர் காந்தி பக்தர். மகாத்மா காந்தி பற்றி முதன்முதலாக ఆ டாக்குமெண்டரிப் படம் தயாரித்து, அதன் மூலமும் ஏ.கே. செட்டியார் புகழ் ஈட்டியிருந்தார்.

அவர் தயாரித்து வெளியிட்ட குமரி மலர்' நல்ல, தரமான : வெளியீடாக அமைந்திருந்தது. வாசகர்களுக்குப் பிடிக்கும் கதை கட்டுரைகளை அன்றையப் பிரபலஸ்தர்கள் எழுதியவை தாங்கி - மாதம் தோறும் வெளி வந்தது.

'குமரி மலர் ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்தது. அதன் வெற்றியைக் கண்டு. பலரும்

- வாசகர்களும் விமர்சகர்களும் 75