பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதம் ஒரு மலர்' வெளியீடு பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். கதை மலர், தமிழ் மலர், கதைக் கொடி, கதைக் கடல் என்றெல்லாம் பெயர் சூடி பலப் பல சமாத வெளியீடு கள் தோன்றின.

சில ஆழ்ந்த இலக்கிய முயற்சிகளாகவும் இருந்தன. அவை இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மறைந்தும் போயின.

வை. கோவிந்தன் பல வருடங்களாக நடத்திக் கொண்டிருந்த சக்தி பத்திரிகை மிகுந்த நஷ்டம் அடைந்திருந்தது. மேலும் அதைப் பத்திரிகையாகத் தொடர்ந்து நடத்த விரும்பாத ഞഖ. കേi്. சக்தி மலர்' என்று மாற்றினார். தொ. மு. சி. ரகுநாதன், கு. அழகிரிசாமி ஆகியோரின் பொறுப்பில் சக்தி மலர்' நல்ல இலக்கியத் தொகுப்புகளாக உருவாயிற்று, ஒரு வருடத்தில் ஒன்பது மலர்கள் கொண்டு வந்த பிறகு, அதுவும் லாபகரமான முயற்சியாக இல்லை என்று உணர்ந்து, வை. கோ. அதைப் பிரசுரிப்பதை நிறுத்தி விட்டார்.

3.

'குமரி மலர் நெடுங்காலம் நடைபெற்றது. பிற்காலத்தில், அதன் உள்ளடக்கம் பெரும் மாறுதலைப் பெற்று விட்டது. ஆரம்ப வ ரு ட |ங்க ளி ல், டி. கே. சிதம்பரநாத முதலியார், சக்கிரவர்த்தி இராஜகோபாலாச்சாரி, வெ. சாமிநாத சர்மா போன்ற பிரபலஸ்தர்களின் எழுத்துக்களைக் கொண்டிருந்தது ئي(fgلت . பிறகு, காலத்துக்குத் தக்கபடி, அவ்வக்காலத்திய

வாசகர்களும் விமர்சகர்களும் 76