பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாங்கிப் படிப்பதில் அ. தி க ம் பேர் ஆர்வம் காட்டலானார்கள்.

தேசீயக் கட்சிக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சி யினருக்கு ஆதரவாக லிபரேட்டர்’ என்ற ஆங்கில, தினசரி வந்தது. அதை விரும்பிப் படிக்கக் கூடிய வாசகர்கள் குறைவாகத் தான் இருந்தார்கள்.

எத்தனை பத்திரிகைகள் வந்தாலும், ஆங்கிலத்தில் ஹிண்டு மாதிரி உள்நாட்டு விசேஷங்கள், அயல் நாட்டுச் செய்திகள், அரசியல், சமூகம், பெச ருளாதாரம், ஸ்போர்ட்ஸ் போன்ற பல்வேறு துறைகள் பற்றிய செய்திகளும் கருத்துக்களும், இப்படி 5了鲈FG煎、

தகவல்களை நல்ல முறையிலும், நடுநிலைமை நோக்கிலும் தரக் கூடிய பத்திரிகை வேறு எதுவும் இல்லை என்ற அபிப்பிராயம் வாசகர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

இப்பவும் இவ்விதம் எண்ணக் கூடிய வாசகர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

'ஹிண்டு பத்திரிகை போல, விசாலப் பார்வை யுடன், பரந்த அளவில், சகல விதமான செய்திகளையும் கருத்துக்களையும் தொகுத்துத் தருகிற பத்திரிகை தமிழில் இதுவரை தோன்றவில்லை என்பதும் நீடித்து வளர்கிற குறைபாடே ஆகும்.

வாசகர்களும் விமர்சகர்களும் 81.