பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சொக்கலிங்கம் தினசரி என்ற பெயரில் ஒரு நாளிதழைத் தெ டங் கி னார். ஏ. என். சிவ ராயன் "தினமணி ஆசிரியரானார்.

நவ இந்தியா, நவசக்தி என்ற நாளேடுகளும் வந்தன.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் குறிப்பிட்ட அளவு வாசகர்கள் இருந்தார்கள். கிடைத்த வாசகர்களை இழந்து விடாதிருப்பதற்காகப் பத்திரிகைகளும் தம்மால் இயன்ற அளவு கவனம் செலுத்தி, பலவித உத்திகளையும் கையாண்டு, தொழிலில் நிலைத்து நிற்கப் பாடுபட்டன.

கம்யூனிஸ்டுக் கட்சி ஜனசக்தி நடத்தியது.

முஸ்லிம் சமூகத்துக்காக தாருல் இஸ்லாம்’ வந்து கொண்டிருந்தது.

எல்லாப் பத்திரிகைகளும் தமிழ் நாடு நெடுகிலும் மிகப் பரவலாக வாசகர்களைப் பெற்றிருந்த ைஎன்று சொல்ல முடியாது. சில பத்திரிகைகளுக்கு குறிப்பிட்ட சில ஜில்லாக்களில் மிக அதிகமாகவும் பல இடங்களில் குறைந்த அளவிலும் ಎr೯೫೯೧; இருந்தார்கள்.

எனினும், பத்திரிகைகளைப் படிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கும் பரவிக் கொண்டிருந்தது. கிராமங்களில் கூட வாசக சாலை கள் ஏற்பட்டன.

அங்கே பல விதமான பத்திரிகைகளும் கிடைப்பதற்கு

வாசகர்களும் விமர்சகர்களும் ‘83