பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அநேக நூலகங்களில் இது நடைமுறை திகழ்ச்சியாக இருந்து வருகிறது.

அதே போல, புத்தக வெளியீட்டாளர்களும், மொழி பெயர்ப்புப் புத்தகங்கள் விற்பனையாவதில்லை; வாசகர்கள் அவற்றை விரும்பி வாங்குவதில்லை என்று

தான் சொல்கிறார்கள்.

இது நிகழ்கால அனுபவம். சமீப சில வருடங்களாக நிகழ்ந்து வருவது. இருபத்தைந்து, முப்பது வருடங்களுக்கு முன்பு நிலைமை இப்படி இருந்தது இல்லை.

"திக்கெட்டும் செல்வீர்; கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்!’ என்ற கவி பாரதியின் வாக்கிற்கு இனங்க, உலக இலக்கியச் செல்வங்கள் பலவற்றையும் தமிழில் கொண்டு வந்து, தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற துடிப்பு எழுத்தாளர்களுக்கு இருந்தது.

திறமை வாய்ந்த படைப்பாளிகள், சுயமாக எழுதுவதுடன் திருப்தி அடைந்துவிடவில்லை. தாங்கள் படித்து ரசித்து இன்புற்ற நல்ல இலக்கியங்களை - நாவல்கள், சிறுகதைகள், நாடகங்களை - தமிழாக்கி வெளியிடுவதிலும் அவர்கள் அக்கறைகொண்டிருந்தார்கள்.

உலக இலக்கியங்களை ஆங்கிலம் மூலம் அறிந்து

கொண்டு, அவற்றில் முக்கியமானவற்றைத் தமிழாக்கித் தத்த படைப்பாளிகள், இந்திய மொழிகளிலிருந்து

வாசகர்களும் விமர்சகர்களும் 86