பக்கம்:வாடா மல்லி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 சு. சமுத்திரம்


அவர் ஓடிய அறைக்குள் தட்டுமுட்டுச் சாமான்கள் கீழே விழும் சத்தம் கேட்கிறது. பூனை பயந்து போய் ‘மியாவ்’ போடுகிறது. அடைகாக்கும் கோழி கூக்குரலிடுகிறது. பத்து நிமிடம் கழித்து வெளியே இருப்பவர்கள், அவரும், மரகதமாய் ஆகப்போகிறாரோ என்று பயந்து உள்ளே போகப் போனபோது, ஆறுமுகப்பாண்டி கையில் ஒரு கசங்கிய தாளோடு வெளியே வந்தார். இதற்குள் அம்மாவின் மடியிலேயே தலையை உருட்டிக்கொண்டிருந்த சுயம்பு மெல்ல எழுந்தான். அண்ணன் அந்தத் தாளை, அவனிடம் நீட்டினார். பிறகு முகத்தைக் கையால் மறைத்துக் கொண்டு கேவினார்.

சுயம்பு, அந்தக் காகிதத்தை உற்று உற்றுப் பார்த்தான். எட்டாம் கிளாஸ் எழுத்து. அக்காவின் அதே கையெழுத்து.

“தம்பி. என் ஆசைத் தம்பியே.

“இன்னும் கொஞ்ச நேரத்துல. அக்கா சாகப் போறேண்டா. நீ வருவே வருவேன்னு, ஒரு வருஷமா வழி பார்த்து காத்துக் கிடந்தேண்டா. ராத்திரியில் நாய் குலைக்கும் போதெல்லாம். நீதான் வந்துட்டேன்னு, அக்கா பல தடவ ஒடோடி வந்து கதவத் திறந்தேண்டா. கண் நோகப் பார்த்தேண்டா. நீ வரலியேடா.. இன்னைக்கு வராட்டால், நாளைக்கு வருவேன்னு இது வரைக்கும் பிடிச்சு வச்ச மூச்ச இன்னைக்கு ஒரேயடியாய் விடப் போறேண்டா. நானும் செத்து ஆவியாகி ஆகாயத்துல பறந்து உன்னைப் பார்க்க முடியுமான்னு யோசிக்கேண்டா. எனக்கு ஆவின்னு இருந்தால், அது ஒன்னத்தாண்டா சுத்தி வரும்.

“தம்பி. என் ராசாதி. ராசா. ஒன்ன விரட்டுன இந்த அக்காவ மன்னிச்சுடுடா... சத்தியமாச் சொல்றேண்டா. ஊரு ஒலகத்துல. நான் கலியாணம் நின்ன கவலையில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/378&oldid=1251107" இலிருந்து மீள்விக்கப்பட்டது