பக்கம்:வாடா மல்லி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 357


தூக்கு போட்டு செத்ததாய் சொன்னாலும் சொல்லு வாங்க... எலும்பில்லா நாக்கு எப்படி வேணுமுன்னாலும் பேசட்டும். என் மனசு எனக்குத்தான் தெரியும். என் உடன் பிறப்பே. ஒன்னப் பார்க்க முடியாத ஏக்கத்துல தாண்டா அக்கா சாகப்போறேன். ஒன்ன நெனைச்ச நெஞ்சுக்கு எந்தக் கலியாணமும் கால்துசிடா. இப்போதுக்குக் கயிற எடுக்கப்போற இந்த சமயத்துலகூட நீ எப்பவாவது வருவேன்னு என் மனசுல பட்டால், இந்த உயிரு போகாதுடா. ஆனாலும் நீ வரமாட்டியே. அப்பாவ மாதிரி ஒனக்கும் வைராக்கியம் உண்டே. எப்பவாவது இந்தப் பக்கம் வந்தால். இந்தத் தாளையே, நானா நினைச்சு வச்சுக்கடா. அக்கா போறேண்டா! ஒன்ன ஆவிரூபத்திலே தேடி வர்றேண்டா!”

சுயம்பு சூனியமானான். அப்படியே நிலைகுலைந்து கிடந்தான். அண்ணன் முதுகை உலுக்கியதும் அவனுக்கு லேசாய் உணர்வு, கண்ணிரால் நனையப்போன அந்தக் கடிதத்தை அண்ணனிடம் கொடுத்து அதை மடித்துத் தரும்படி சைகை செய்தான். அண்ணன் அந்தக் கடிதத்தை அவன் சொன்னபடியே மடித்து அவன் பைக்குள் போட்ட போது, சுயம்பு அந்தக் கையையும் பையையும் ஒரு சேரப் பிடித்தபடியே அண்ணனின் முழங்கையில், முகம் போட்டு தேய்த்தான்.

எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாக விசும்பினார்கள். பிள்ளையார்தான் தட்டுத் தடுமாறி என் தம்பிய கூப்பிடுங்க. சந்தோஷப்படுவான்.” என்றார். ஆறுமுகப் பாண்டி, “நீ சேல வேணும்னாலும் கட்டிக்கடா. ஆனால். இனிமேல் நீ என்கூடத்தாண்டா இருக்கணும்.” என்றார். வெள்ளையம்மாள் இப்போது மெலிந்த குரலில் ஒரு விவரம் சொன்னாள்.

“எப்பா சுயம்பு. ஒங்க அண்ணனும். மயினியும் நீ போன நாளுல இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/379&oldid=1251109" இலிருந்து மீள்விக்கப்பட்டது