பக்கம்:வாடா மல்லி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 361


“மலர் எப்படி இருக்காள் மோகனா...”

“எவனோ இழுத்துட்டுப் போயி அலக்கழிச்சு பிள்ளையும் வயிறுமா விட்டுட்டான். என்ஜினியர்னு நம்புனாள். புளியமரத்தைப் பிடிச்சேன்னாள். கடைசியல அதுல தூக்குப் போடாம ஓடி வந்துட்டாள்.”

சுயம்பு எழுந்தான். அக்காள் இருந்த அறையைப் பார்த்து நடந்தான். அந்த அறையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அந்த இடத்திலேயே பீரோ, தூசி படிந்து கிடந்தது. அக்காளின் படம் வாடிப் போன மாலையோடு தொங்கியது. அவன் தனித்திருக்க, அந்தக் கதவைச் சாத்தப் போனபோது, கோமளமும், மோகனாவும் கைகளைப் பிசைந்தபடி அங்கே வந்தார்கள். அவன் ஒருத்தருக்குப் பேசுவது இன்னொருத்தருக்கு அர்த்தம் புரியாததுபோல், பொதுப்படையாகச் சொன்னான்.

“கவலைப்படாதீங்க. நீங்க ரெண்டுபேரும் செய்த காரியங்களைப் பற்றி நான் யாருகிட்டயும் மூச்சு விட மாட்டேன். என் மனசுலகூட திருப்பி வரவழைச்சு யோசிக்கமாட்டேன். இப்பவாவது ஒரு உதவி செய்யுங்க. எனக்குத் தாயாகிப்போன என் அக்கா அறையில என்னத் தனியா விடுறீங்களா..”

சுயம்பு கண்ணிரும் கம்பலைமாய்க் கதவைச் சாத்தினான்.

42

அந்தச் சேரியின் சேரிக்கு ஒரு காலத்தில் வெறுங் காலோடு நடந்த சுயம்பு இப்போது மேகலையாய் காரோடு போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/383&oldid=1251113" இலிருந்து மீள்விக்கப்பட்டது