பக்கம்:வாடா மல்லி.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 சு. சமுத்திரம்


அதே அந்த வெள்ளைக் கார், வெளியே உள்ள பிரதான சாலையின் ஒரத்தில் நின்றபடியே, குறுகலான அந்தச் சேரிப்பாதைக்குள் போக முடியுமா என்பதுபோல் அங்குமிங்குமாய் பாவலாப் போட்டு பதுங்கிப் பதுங்கி முன்னாலும் பின்னாலும் நகர்ந்தது. இப்போது, அப்போதைய தேநீர்க்கடையை ஹோட்டலாக்கிக் கொண்டவர், தற்செயலாக வெளியே வந்தார். அந்தக் காரின் கவர்ச்சிக்கு உட்பட்டு “உள்ளே போகாதுங்க..” என்றார்.

அந்தக் கார் அங்கேயே ஒரம் கட்டப்பட்டது. முன்னாலிருந்து நீலிமாவும் மார்கரெட்டும், பின்னாலிருந்து குஞ்சம்மாவும் லட்சுமியும் ஆளுக்கு ஒரு வழியாக இறங்கினார்கள். பிறகு உள்ளே எட்டிப்பார்த்து இருவருமே கையை நீட்டினார்கள். மேகலை நஸிமாவுடன் வெளியே வந்தாள். கூத்தாண்டவர் கோவிலில் உடைத்த-உடைபட்ட வளையல்களுக்குப் பதிலாக, வெள்ளையும் மஞ்சளும் கலந்த பிளாஸ்டிக் வளையல்களைப் போட்டிருந்தார்கள். மற்றவள்களைப் போலவே கொண்டை நிறையப் பூக்குவியல். அதே வெளிர் மஞ்சள் புடவை, பட்டுச்சேலை தான.

அவர்களைப் பார்த்ததும் லேடி லயன்கள் என்று நினைத்தவர்கள், வேட்டிகளை இழுத்துப் போட்டு, முகங்களை நிமிர்த்தி, தங்களின் வேண்டுகோள்படி, அவர்கள் அங்கே வந்திருப்பதாக ஒரு அனுமானம் காட்டி னார்கள். மேகலை, ஆவலை அடக்க முடியாமல் ‘குருவக்கா-பச்சையம்மா இருக்காங்களா என்று கேட்டாள். கூடியவர்களின் முகம் சுண்டியது. ஹோட்டல் காரர், அந்தக் கொண்டை முகத்திற்குள்ளும், சேலை உடம்பிற்குள்ளும் லுங்கி கட்டிய சுயம்புவை அடையாளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/384&oldid=1251114" இலிருந்து மீள்விக்கப்பட்டது