பக்கம்:வாடா மல்லி.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 சு. சமுத்திரம்


கேட்டதில் அதிர்ந்துபோன அந்தத் துப்பாக்கி, குருவக்காவை ஆறுதலாகப் பார்த்தது. அவளும் ஆவேசப் பட்டாள்.

“இப்படித் தராதரம் தெரியாமக் குதிக்கீங்களே.நீங்க உருப்படுவீங்களா. போன மாசம் மாமுல் கட்டுனோம். இந்த மாசம் இன்னும் கட்டலன்னு இப்படியா குதிக்கது. பிச்சக்காச நேராய் கேளேய்யா!”

குருவக்காவும் கீழே விழுந்தாள். ஆனால் மேகலை எழுந்தாள். இதற்குள், பித்து பிடித்து நின்ற, நீலிமா, சப்-இன்ஸ்பெக்டர் கையைப் பிடித்து இழுத்தாள். லட்சுமி ‘என்னைச் சுடுடா என்று முந்தானையைக் கீழே போட்டு விட்டு, மார்பைக் காட்டினாள். அதே சமயம், ஆறு போலீஸ்காரர்களும் அந்த அலிக் குடிசைகளை சிதைத்து சின்னா பின்னம் செய்துகொண்டிருந்தார்கள். பல மொட்டையாயின. சில கட்டையாயின. மண் பானைகள் சில்லு சில்லாய் நொறுங்கின. ஈயப் பானைகள் அந்தப் பழைய குட்டையில் விழுந்தன. குடிசைகளைக் காப்பாற்ற ஒடிய பல அலிகள், திரெளபதிகளாக நின்றனர். இதற்குள் நீலிமா குரல் கொடுத்தாள்.

“போலீஸ் மர்தாபாத். போலீஸ் மர்தாபாத்.”

அந்த மர்தாபாத் என்ற வார்த்தையின் பொருள் புரியாத அத்தனை பேரையும் அந்த வார்த்தை எப்படியோ பற்ற வைத்தது. ஒவ்வொரு உடம்புக்குள்ளும் ஒரு நெருப்பு ஜ்வாலை எரிந்தது. அடிபட்டு நோகும் அத்தனை அலிகளும் கிலி விட்டுப்போனதுபோல் போலீஸாரை சூழ்ந்தார்கள். ரத்த சாட்சியோடு கத்தினார்கள். இதற்குள் அந்தக் காட்டுத் தீயின் உஷ்ணத்தால் சூடு வந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அந்தச் சேரியிலுள்ள சராசரிகளும், இப்போது அசாதாரணங்களாத் திரண்டனர். தடியடிக் கம்புகளைத் தாவிப் பிடித்தார்கள். எங்கிருந்தெல்லாமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/392&oldid=1251124" இலிருந்து மீள்விக்கப்பட்டது