பக்கம்:வாடா மல்லி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 373


கருணை காட்டுறதாய் சொல்ற தமிழ்நாடு அரசு, இவங்க பக்கம் கண்ணைக் காட்டல... இவ்வளவுக்கும் அமைச்சருங்க போகிற சாலைப் பக்கம்தான் இவங்க அலையுறாங்க. நடக்கிறாங்க”

“இதெல்லாம் எங்க அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். நடந்ததைச் சொல்லுங்க”

“ஏ.ஸி.லார். ஒங்களுக்கு சொல்லாட்டாலும் பிரஸுக்கு சொன்னதாய் நெனச்சு சும்மா இருங்க.. இந்தாம்மா, ஒங்களப் பத்திச் சொல்லுங்க”

மேகலை, போலீஸ்காரர்களைப் பொருட்படுத்தாது செய்தியாளர்களிடம் தன்னைப் பற்றிச் சுருக்கமாகவும், அங்கே நடந்தவற்றை விவரமாகவும் சொன்னாள். அலிஸ்டெண்ட் கமிஷனர் புன்னகைத்துப் பேசினார்.

“இந்தாப்பா.. எல்லாப் போலீஸும் வெளியில போங்க.நாளைக்கு என்ன ஆபீஸ்ல பாரும்மா. இதுதான் என் கார்டு.”

“போகாதக்கா. அடி அடின்னு அடிப்பாங்க.எனக்கு கிடைச்சது மாதிரியே கிடைக்கும்.”

ஒரு லுங்கிப் பெண், அசல் பெண் தோற்றக் குரலில் பேசியபோது எல்லோரும் சிரித்தார்கள். அப்புறம் சிரித்தது தப்பு என்பதுபோல் வாயை மூடினார்கள். ஆங்காங்கே சூழ்ந்து நின்ற கும்பல்கள் இப்போது கூட்டங்களாகி, குழைந்து நின்றன. ஏ.சி.யும் பிரஸ்மென்னும் ஆழமாகப் பேசிக்கொண்டார்கள்.

“வாங்களேன். உங்கள நானே டிராப் செய்யுறேன். மூணு ஜீப் இருக்குது.”

“வேண்டாம் சார். ஸ்கூட்டர் இருக்குது. பஸ் ஸ்டாண்டும் பக்கத்துல இருக்குது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/395&oldid=1251127" இலிருந்து மீள்விக்கப்பட்டது