பக்கம்:வாடா மல்லி.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 சு. சமுத்திரம்


உறவாடிய ஊருக்கு மீண்டும் போகப் போகிற மகிழ்ச்சியை நினைத்தபடியே எழுந்தாள். இதற்குள், நீலிமா இரண்டு சூட்கேஸ்களை ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைத்து விட்டு, போர்வைகளை மடித்து, ஒயர்க் கூடைக்குள் திணித்தபடியே, “ஜல்தி, ஜல்தி” என்றாள். பிறகு மேகலையின் முன்னால் போய், தனது கடிகாரம் கொண்ட கையைத் தூக்கிக் காட்டினாள்.

மேகலை அவசர அவசரமாக எந்தப் புடவையைக் கட்டலாம் என்பதுபோல் யோசித்தாள். காலத்தின் கோபத்தையும் கருணையையும் நினைத்தபடி வெளிர் மஞ்சள் புடவையை எடுத்து உடம்பில் சுற்றியபடியே உள்ளத்தைச் சுற்றவிட்டாள். அண்ணனின் கடிதம் முந்தா நாள் கிடைத்தது. பதினைந்து நாட்களுக்கு முன்பு கலியான அழைப்பிதழுடன் அவன் அனுப்பிய கடிதம். தேதி நன்றாகவே தெரிகிறது. தபால் முத்திரையும் அப்படியே. ஆனால் தபால்துறை, இதர சகோதரத் துறைகளைப்போல் பின்வாங்குவதில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதே நிலை நீடித்தால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக் குழந்தை பிறந்தபிறகு கூட கலியான அழைப்பிதழ் கிடைக்கலாம். கிடைக்குமே..அதுவே பெரிசு.

மேகலை இவ்வாறு தனக்குள் பேசியதைத் தானே ரசித்து, மெல்லச் சிரித்தாள். அண்ணனின் கடிதத்தையும், மீண்டும் மனதுக்குள் வாசித்தாள். அண்ணன் மகன் மோகன் என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்துவிட்டானாம். போன மாதம் அனுப்பியதுபோல் அவனுக்குக் கண்டபடி பணம் அனுப்பிச் செல்லம் கொடுக்கக்கூடாதாம். தங்கையின் கலியாணத்திற்கு இதுவரை அனுப்பிய பணத்தில் நிறைய மிச்சமிருக்கிறதாம். ஆபீஸ்கார’ மாப்பிள்ளைக்கு, அளவுக்கு மீறிச் செய்து அவன் ஆசையை பேராசையாக்கக் கூடாதாம். வீட்டுக்கு மனம் போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/398&oldid=1251131" இலிருந்து மீள்விக்கப்பட்டது