பக்கம்:வாடா மல்லி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 379


எச்சிக்கலை புத்தி அவங்கள விட்டுப் போகாது. ஒரு பேப்பர்ல ‘அலி அழகிகளின் ஆர்ப்பாட்டம் படு தமாஷ்னு போட்டான் பாரு.நம்ம பிரச்னையவிட அவனுக்கு நம்ம நெளிவு சுழிவுதான் பெரிசாப் போச்சு. அவன் வீட்ல ஒரு பொட்டை விழ. ஆனாலும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால், தமிழ்ப் பத்திரிகைங்க நம்ம தலை நிமிர வச்சிட்டு.”

குஞ்சம்மாவினால் சும்மா இருக்க முடியவில்லை. பி.டி.ஐ., யு.என்.ஐ. ஏஜென்ஸிகளால் நாடு முழுக்க இந்தச் செய்தி எப்படியோ ஒருவிதத்தில் வந்தது அவளுக்குத் தெரியாது. ஆனால், மலையாளத்தில் வந்தது நல்லாவே தெரியும். என்ன நெனெச்சுக்கிட்டாள் இந்த லட்சுமி.

“ஏ.டீ... பிராந்தி. தமிழ்நாடு, மாத்ரம் ஆனோ.. பத்திரிக்கை உள்ளன்னு விஜாரிக்கலே... எங்கட. மலையாளத்துல. கூடியும் வந்துட்டுண்டு.”

மேகலை, அந்தக் காகிதப் புலிகளைக் கையாட்டித் தடுத்தபோது, பச்சையம்மா, தான், அவளோடு போக வேண்டியதன் அவசியத்தைக் கடைசி நிமிட முயற்சியாகச் சொன்னாள்.

“ஊருக்காக இப்பவே வேட்டி சட்டையில நிக்கே. கொண்டைய எப்படி மறைக்க முடியும். இந்த நீலிமாவுக்கு என்ன தெரியும்? நான் கூட வந்தால், தலைக்கு முண்டாசு கட்டிவிடுவேன்.நீலிமாவ என் மகள்னு சொல்லி, ஒனக்கு அந்த நாலு நாளைக்கும் மாமியார் மாதிரி நடிப்பேன். யோசிச்சுப் பாரு...”

“யோசிக்கிறதுக்கு எதுவுமில்ல பச்சை. ஒரு பெரிய டோபாவ வாங்கி கொண்டைய உள்ளுக்குள்ள திணிச்சிடலாம்.”

“லட்சுமிக்கா. அம்மாவ பொட்டையா கூப்பிடாதே. நீ சொல்ற டோபாவோ. அக்கா சொல்ற முண்டாசோ தேவையில்ல. என் தங்கைக்கு நல்ல இடத்தில முடிஞ்சால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/401&oldid=1251369" இலிருந்து மீள்விக்கப்பட்டது