பக்கம்:வாடா மல்லி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 381


சரி, சரி, பிதாஜி கார் வந்திட்டு. நீலிமா ஒன் முகத்துக்கு எத்தனை தடவை பெயிண்டடிப்பே.”

“ஆமா, நீலிமாவுக்கு அங்க போயி பாண்ட் சர்ட் கொடுக்கப் போறியா...”

“இல்ல.இப்படியேதான் வருவாள். பார்க்கிறவங்க அவள என் ஃபாரின் பெண்டாட்டின்னு நினைச்சுட்டுப் போகட்டுமேடி”

எல்லோரும் சிரித்தார்கள். நீலிமா, தனது மேக்கப்பைத்தான் அவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்று உதட்டில் ஒவராய்ப் போன லிப்ஸ்டிக்கைத் துடைக்கப் போனாள். மேகலை, அவசரப்பட்டு, அவசரப் படுத்தினாள். “ஜல்தி, நீலிமா.ஜல்தி. நாம் போகப்போறது பட்பட் வண்டி இல்ல. ட்ரெயின்.”

நீலிமா, சூட்கேஸ்களைத் தூக்கிக்கொண்டு மேகலை யுடன் புறப்படப் போனபோது

தபால்காரர் ஒரு கத்தை காகிதங்களைப் போட்டு விட்டுப் போனார். பெரும்பாலானவை பத்திரிகைகள். குரு அலிகள்ன் விழா நிகழ்ச்சிகள். அதற்குள்ளே ஒரு இன்லண்ட் கவர். எடுத்துப் பார்த்தால் மோகனா பெயர். படித்துப் பார்த்தாலோ

“என் அன்புள்ள அண்ணன் அல்லது அக்காவுக்கு,

மோகனாவின் வணக்கம்.

நீங்கள் என்னிடம் காட்டிய கருணைக்கு, நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் உதவி மட்டும் இல்லையானால், மொட்டை மரமாய் முடிந்திருப்பேன். ஒருவேளை நமது அக்காவின் நிலமை எனக்கும் வந்திருக்கலாம். எப்படியோ எல்லாம் நல்லபடி யாய் முடியப்போகிறது. என்னடா ஊருக்கு வரப்போகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/403&oldid=1251373" இலிருந்து மீள்விக்கப்பட்டது