பக்கம்:வாடா மல்லி.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 383


லிஸ்ட்ல பெயர் இருக்கிறதால முழுப்பணமும் கிடைக்கலாம். ஜல்தி. குயிக்...”

மேகலை, தன்னைத் தவித்துப் பார்த்தவர்களுக்கு பட்டும் படாமலும் பதிலளித்தாள். ‘மகளே மகளே. நானிருக்கேன் மகளே. நாங்க இருக்கோம் மகளே என்று புலம்பிய பச்சையம்மாவின் முதுகைத் தட்டிவிட்டு கோபத்தில் கால்களைப் போட்டுத் தரையில் மிதிக்க விட்ட நீலிமாவை இழுத்துப் பிடித்துக்கொண்டு, மேகலை அழுகைச் சிரிப்போடு சொன்னாள்.

“என் செல்லத் தங்கச்சி, என்னை நான் காட்டிக் கொடுத்துவிடுவேன்னு தன்னைத்தானே காட்டிக் கொடுத்துட்டாள். அவள் பயமும் நியாயமானதுதான். பெரும்பாலானவங்க தங்கள மையமா வச்சுத்தான் மத்தவங்களை நினைக்காங்க. நல்லவேளை. அவள் ஒருத்தி மட்டும் எனக்கு சகோதரி இல்லே. நீங்கெல்லாம் யாராம்! நீலிமா. ஜல்திம்மா.”

நீலிமா புறப்படப் போனாள். இதற்குள் கூரியரில்’ ஒரு கடிதம். குருவக்கா கடிதம். நீலிமாவை லேசாய் கையமர்த்திவிட்டு அந்தக் கடிதத்தின் மீது ஒட்டு மொத்தமான பார்வையைப் போட்ட மேகலை, இப்போது ஒவ்வொரு வரியாகப் படித்தாள்.

“என் கூடப் பிறக்காத பிறப்பே ! “சொகமா இருக்கியா? பச்சையம்மா செளக்கியமா. ஒன் தோழிகள் சுகமா...

“நீ நம்ம சனங்கள, கூப்பிட்டு வச்சு பேசுனதில் எல்லோருக்கும் சந்தோஷம். நாம், ரெண்டுபேரும் பேட்டை பேட்டையாய் போய் பேசிவிட்டு, அப்புறம் ஒரே இடத்துல கூடி, சில முடிவு எடுத்தோமே, அது சீரா நடந்துக் கிட்டிருக்கு. நாதியில்லாமப் போன, நமக்கு நீ ஜோதியாய் வந்திருக்கேன்னு எல்லாப் பேட்டையிலயும், நம்ம ஆட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/405&oldid=1251376" இலிருந்து மீள்விக்கப்பட்டது