பக்கம்:வாடா மல்லி.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 385


கைலாசம்தான். கால் விலங்கோட கை விலங்கும் சேர்ந்துடும்.”

“ராசாத்தி மாதிரி வாழ்கிற ஒன்னை, இந்த மாதிரி சிக்கலுல சிக்க வைக்கிறதுக்கு மனசுக்கே கஷ்டமாக இருக்குது. அதே சமயம் ஒன் மனசும் எனக்குத் தெரியும்.”

சுயம்பு, மேகலையானாள். வேட்டியையும் சட்டையையும் வீசிப் போட்டு விட்டு பெண்ணாடைகளைக் கட்டிக்கொண்டாள். உடம்பைச் சுற்றிய புடவை வெளிர் மஞ்சளா அல்லது துளிர் பச்சையா என்பதைக் கண்டுபிடிப்பதில், அவளுக்கு அக்கறையில்லை. குருவக்காவின் கடிதத்தை ஜாக்கெட்டுக்குள் திணிக்கிறாள். அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாள்.

“டிக்கட்ட கான்ஸல் செய்ய வேண்டிய அவசியமில்ல நீலிமா. கார்ல சூட்கேஸ்களையும் தட்டுமுட்டுச் சாமான் களையும் எடுத்து வை. மெட்ராஸ்ல நிறைய வேலை இருக்கு. ஜல்தி நீலிமா.ஜல்தி.”

எல்லோரும் திகைத்துப் பார்க்கிறார்கள். மூடு மந்திர மாய் பேசிய மேகலை ஆத்திரம் கொடி கட்டிப் பறக்க, ஆவேசம், கனல் கட்டிக் கொதிக்கக் கொதிக்கச் சொல்கிறாள்.

“நாங்க திரும்பிவர ஒருவாரம் ஆகலாம். ஒரு வருஷம் கூட ஆகலாம். எங்கே இருக்கப்போறோம்னு எங்களுக்கே தெரியாது. சீக்கிரமாய் திரும்பி வந்தாலும் அடிக்கடி மெட்ராஸ் போக வேண்டியிருக்கும். நலிமா.பராக்குப் பார்க்காதே! மார்கரெட் ஜாக்கிரதை. லட்சுமிக்கா, குஞ்சம்மா கவலைப்படாதீங்க. எம்மா. இவளுங்க ஒனக்கு என்னைமாதிரி மகளுக...பிதாஜிகிட்ட விவரத்தை சொல்லுங்க. நான் சந்திக்கப்போற பிரச்னைக்கு, அவர் மூலம் மத்திய அரசாங்கத்தோட உதவியும் தேவைப்பட லாம்.நீலிமா குயிக்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/407&oldid=1251390" இலிருந்து மீள்விக்கப்பட்டது