பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 7 படவில்லே. கனக்கின்றிச் செலவழித்து காலம் கழித்ததிை லுண்டான பெருங் கடன்களினின்றும், கவுரமாய் என்ன மீட்டுக்கொள்வதே, எனக் கிப்பொழுது பெருங் கவலேயாம் அகந்தா, உனக்கே நான் அதிகமாய்க் கடன்பட் டிருக் கிறேன், பணத்திலும் பிரீதியிலும்; என்மீ துனக் குள்ள பிரீதியானது, நான் கொடுக்கவேண்டிய கடன்களே ஒழித்து கான் கடைத்தேறுவதற்குச் செய்துள்ள யோசனேகளேயும் சூழ்ச்சிகளையும், உன்னிடம் வெளியிடலாமென்று என்னே நம்பும்படிச் செய்கிறது. பானுசேன, உன்னே நான் வேண்டுகிறேன், உடனே அதை எனக்குத் தெரிவி ; உன்னே எப்பொழுதும் நான் மதிப்பது போலவே, அதையும் கான் கெளரவமாய் மதிக்கக்கூடு மாயின், என் செல்வமும், நானும், என்னுடைய சர்வ ஆஸ்தியும், உன் ஆபத்திற் குதவ அடிமைப்பட்டிருக்கின் றன. வென்று உறுதியாய் நம்பு. நான் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் பருவத்தில், நான் எய்த ஒரம்பு காணுமற்போக, அதைக் கண்டுபிடிக்க வேண்டி, அதே வேகத்துடன் செல்லும்படியான வேருெரு அம்பை அதே திக்காக கவனத்துடன் எய்து, இரண்டையும் இழக் கத் துணிந்து இரண்டையும் கண்டெடுத்திருக்கின்றேன். நான் இப்பொழுது கூறப்போகின்ற யோசனையும், இவ் வாறே கபடமறியாப் பேதமை யாதலால். பால்யத்தில் நான் செய்ததை உதாரணமாகக் கூறினேன். நான் உனக்குச் செலுத்தவேண்டிய கடன் அதிக மிருக்கிறது, மனம் போன வழி செலவழித்ததினுல் அதனத் தீர்க்க அசக்தன யிருக் கின்றேன். முதலில் எய்த அம்பின் பின்பாக, மற்ருெரு அம்பை எய்ததுபோல், கொடுத்த கடனுடன் இன்னும் கொஞ்சம் கடன் கொடுப்பையாயின், நான் ஜாக்கிரதையாய்க் கவனித்து, இரண்டு கடன்களையும் ஒன்ருய்க் கழிக்கவாவது கழிக்கின்றேன், இல்லாவிடின் இரண்டாம் முறை கொடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/11&oldid=900078" இலிருந்து மீள்விக்கப்பட்டது