பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 109 t-If • {_ï (T... இப்பொழுது, பிச்சை கேட்டால் அதை எப்படி மறுப்பது என்று கற்பிக்கின்றீர் என எண்ணுகிறேன். ஐயா, இந்த மோதிரம் என் மனேவி எனக்குக் கொடுத்தது. அவள் அதை என் விரலி லிட்டபொழுது, அதை நான் ஒரு காலும் இழக்கவாவது, விற்கவாவது, கொடுக்கவாவது கூடாதென்று, சத்தியம் செய்யும்படிச் செய்தாள். இந்தப் போக்கானது தானம் கொடாம லிருக்க அநேகருக்கு உதவுகின்றது. உமது பெண்சாதி பயித்தியக்காரியா யல்லா மல், இந்த மோதிரத்தைப் பெற நான் எவ்வளவு அருஹன் என்பதை அறிந்திருப்பா ளாயின், இதை நீர் எனக்குக் கொடுத்ததற்காக உம்மீது எக்காலமும் துவேஷம் பாராட்ட மாட்டாள்.-சரி, நீர் சுகமா யிரும், நான் வருகிறேன். (சரோஜினியும், நீலகேசியும் போகிருர்கள். பானுசே,ை அவருக்கு அந்த மோதிரத்தைக் கொடுத்து விடு. அவரது மகிமையும் என் அன்பும் உன் மனேவியின் கட்டளேக்கு எதிராகச் சீர்தூக்கப் படட்டும். போ ! கிரிஜாகாதா, ஒடிப்போய் அவரைப் பிடித்து அவ ரிடம் இந்த மோதிரத்தைக் கொடு. உன்னல் முடியுமானல் அவரை அகந்தநாதர் வீட்டுக்கு அழைத்து வா. போ உடனே சிக்கிரம். (கிரிஜாகாதன் போகிருன்.) வா. யுேம் நானும் அங்கே போய்ச் சேர்வோம். நாளேத் தினம் பொழுது விடிந்தவுடன் நாம் மணிபுரத்துக்குப் பறந் தோடிப் போவோம்.-வா. அகந்தகாதா. (போகிருர்கள்.) காட்சி முடிகிறது.