பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 115 Nóir , துப்பார். வாத்யத்தின் கோஷமாவது, அல்லது சங்கீதத்தின் ஸ்வரமாவது அவைகளின் செவியிற் பட்டமாத்திரத்தில், உடனே சங்கீதத்தின் இனிமையான சக்தியினுல், தங்கள் குரூரமான பார்வை சாந்தமான பார்வையாக மர்ம அவை: கள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு அசைவற கிற் பதைக் காண்பாய். ஆகவே கவியானவர், ரீகிருஷ்ணனது குழலோசையைக் கேட்டு செடிகள் முதலியனவும், கற்களும், ஆறுகள் முதலியனவும், உருகி ஆனந்த சாகரத்தில் மூழ்கி யதாக வர்ணித்திருக்கின்ருர். ஏனெனில், உலகத்தில் எப் படிப்பட்ட ஜடமாயிருந்தபோதிலும், கடினமான தாயினும் எப்படிப்பட்ட மூர்க்கமான தாயினும், சங்கீதமானது தற் சமயம் அதன் குணத்தை மாறச்செய்கிறது. சங்கீத ஞானம் சற்றுமில்லாது மதுரமான சங்கீதத்தைக்கேட்டு மன முருகாத மனிதன் ஒருவன் உண்டேல், அவனே ராஜத் துரோகி யென்றும், சதிக்காரன் என்றும், பறித்துண்ணும் கொடியனென்றும், நாம் மதிக்கவேண்டும். அவனது உணர்ச்சியானது அரு நரகைப்போல் இருண்டதாயும், அவனது ஆன்மா அந்தகாரத்தில் முழுகியதாகவும், நாம் அறியவேண்டும். அப்படிப்பட்ட மனிதனே அரைக்ஷணமும் நாம் நம்பலாகாது. அதோ, சங்கீதத்தைக்கேள். சற்று தூரத்தில் சரோஜினியும், நீலகேசியும் ಮಅದಿಆfಷವf. அதோ, நமது கண்ணுக்குப் புலப்படுகின்ற விளக்கு எனது அறைக்குள் எரிகின்றது. அந்தச் சிறு விளக்கின் ஒளி யானது எவ்வளவு தூரம் பிரகாசிக்கின்றது ! இப்பாழான உலகத்தில் அவ்வாறே நெடுந்துாரம் பிரகாசிக்கின்றது ஒரு நற்செற்கை. சந்திரன் பிரகாசித்தபொழுது அந்த விளக்கை நாம் பார்க்க வில்லை.