பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-21 வாணிபுர வணிகன் 65 t„£f?”. உண்மையை உரைத்து உன் காதலைப் பெறவேண்டு மென் பதே என் உட்கருத்தாம் - ஹா ! என்ன சுகமான ஹிம்சை! என்னே ஹிம்சிப்பவளே அந்த ஹிம்சையினின்றும் நீங்க வழி கற்பிக்கிருள் அதிருக்கட்டும், பெட்டிகளைக் காட்டச் சொல், என் அதிர்ஷ்டத்தை நான் பார்க்கவேண்டும். (பெட்டிகளின் முன்னிருக்கப் பட்ட திரையானது தள்ளப் படுகிறது.) சரி, போம் ஆல்ை; அவைகளி லொன்றில் நான் பூட் டப்பட் டிருக்கின்றேன். என்மீது உண்மையான காதல் உமக்கிருக்குமாயின், எப்படியும் என்னேக் கண் டெடுப்பீர். -நீலகேசி, நீயும் மற்றவர்களும் ஒரு புறமாக நில்லுங்கள் ; அவர் கோரும்பொழுது சங்கீதம் வாசிக்கப்படட்டும் ; அவர் தோல்வி யடைவாராயின், கோரிக்கைகள் மரிக்கும் காலத் தில் பாடிய பாடல்களாகும். அந்த உபமானமானது முற்றி லும் சரியாகும்படி, என் கண்ணிரானது அவர் மூழ்கி மரித் திடும் வெள்ளப் பெருக் காகுக ! ஒரு கால் அவர் ஜெயிக்க லாம் : அப்பொழுது இந்தச் சங்கீதம் என்னும் அப் பொழுது இச் சங்கீதமானது, புதிதாய் மகுடாபிஷேகம் செய்துகொண்ட சக்கிரவர்த்திக்கு, சத்யவந்தர்க களான பிரஜைகள் பணியுங்கால் முழங்கும் வாத்ய கோஷமாகும். அன்றியும், மணநாளில் அருணுேதய காலத்தில், சுகமாய் நித்திரை செய்துகொண்டிருக்கும் மணமகன் காதில் மிருது வாய் நுழைந்து, அவனே மணப் பக்தலுக்கு அழைக்கும், மங்கள வாத்தியத்திற்குச்சமான மாகும்.-அதோ போகின் ருர், புவியினிற் பிறந்த பூவியல் ஜானகியை மாலேயிடப் புண்ணிய புருஷனுன ரீராமன் வில்லை யெடுத்து நானேற் றிடப்போன காம்பீரத்துடனும், அவரைவிட அதிக காத லுடனும். நான்தான் மைதிலி, ஒரு புறமாய் கிற்கும் இப் பரிஜனங்கள், ஜானகியின் மணத்துக்கு வந்து, எப்படி முடியுமோ என்று ஏங்கி கிற்கும் அரசர்கள். - காதலா, போம், ர்ே வாழ்ந்தால் கான் வாழ்வேன். அமர் $9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/69&oldid=900239" இலிருந்து மீள்விக்கப்பட்டது