பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வாணிபுர வணிகன் 67 چم & தரிக் கின்றனர், மற்றவர்கள் கண்டு மருண்டிட அழகைப் பார். ஆடை யாபரணங்களின் இடையில்ை அது விலக்கு வாங்கப்படுகின்றது, என்பதைக் காண்பாய். அவைகளே அதிகமாய் அணிபவர்களின் சுபாவத்தை, ஆச்சரியப்படும் படி முற்றிலும் மாற்றி, அதிக அழ குடையவர்கள்போல் காட்டுகின்றது. காற்றில் அசைந்து விளையாடும், கட்டழகி எனக் கருதப்படும் காரிகையின் கரு முகில்போன்ற அளக பாரம், கிட்டிப் பார்த்தால் மொட்டைத் தலையிடத்திருந் தும் ஸ்வீகாரம் வாங்கியதா யிருக்கும் பெரும்பாலும் ; அல் லது அதை உண்டுபண்ணின கண்டை மடிந்து மண் இணுய்ப்போ யிருக்கலாம். இவ்வாறு வெள் ஆபரணமெல் லாம் அபாயகரமான சமுத்திரத்தின் மோசகரமான கரை யாகும், உள் ளிருக்கும் அசங்கியத்தை மூடும் வெளி உத் தரீயமாம். ஒரு வார்த்தையில், விவேகிகளையும் மயக்கி, வலையிற் சிக்கச்செய்ய, மேலுக்கு வாஸ்தவம்போல் வேடம் தரிக்கும் கபடமே யாம். ஆகவே ஆடம்பரத்தோடு கூடிய ஆணிப் பொன்னே, ஆன்ருேர் ஒட்டுக் கொப்பாய் மதித்த அபரஞ்சியே, நீ வேண்டா மெனக்கு ஒருவர் கையினின்றும் ஒருவர் கைக்கு மாறிக்கொண்டிருக்கும், அற்பமாம் வெளுத்த வெள்ளியே, யுேம் வேண்டா மெனக்கு.-அழகிலா வெறும் ஈயமே, ஏேதேனும் கொடுப்பதாக வாக்களியாது பயமுறுக் திய போதிலும், நீ ஒன்றும் கூருமலிருத்தலே, எனக்கு அதிகமாய்க் கூறுகின்றது. உன்னேயே கான் கோருகின் றேன் எனக்கு சந்தோஷ முண்டுபண்ணுவையாக ! இதுவரையிலும் எனக் கிருந்த சந்தேகமான எண்ணங் கள், ஆய்க் தறியா கிராசை, ஒடுக்க முறும் பயம், பொருமை முதலிய இவைகளெல்லாம் எப்படிக் காற்ருய்ப் பறந்தோடுகின்றன காதலே பொறுமையை வலுதி ! உனது ஆகந்த பரவசத்தைத் தணித்துக்கொள் ! உன் சந்தோஷத்தை அத்துமீற விடாதே, இந்த அதிகத்தை அடக்கிக்கொள் ! உன்னுல் எனக் குண்டாகும் சந்ேதிாஷம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/71&oldid=900245" இலிருந்து மீள்விக்கப்பட்டது