பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 S {-jij". வாணிபுர வணிகன் (அங்கம்-3 பொறுக்கமுடியவில்லை; அதைக் குறைத்துக்கொள், இல்லா விடின் இது எனக்குத் தெவிட்டப்போகுமென அஞ்சு கிறேன். என்ன காண்கின்றேனே இங்கு நான் ? (ஈயப் பெட்டியைத் திறந்து) ஒப்பு உயர்வு இல்லா சரோஜினியின் உருவமா ? சிருஷ்டிக்கு ஒப்பாக அவ்வளவு அழகாய்ச் சித்திரம் எழுதிய தெய்விகம் பொருந்தியவன் யார் : இந்தக்கண்கள் அசை கின்றனவோ ? அல்லது, எனது கண்களில் பிரதிபிம் பிப்பதில்ை, சலனப்படுவனபோல் தோற்றுகின்றனவா P இதோ இவ் வதரங்கள் பிரிந்திருக்கின்றன சுகந்த சுவாசத் தில்ை, இத்தனே இனிய பிரிவே அத்தனே இனிய நண்பர் களேப் பிரித்திடல் வேண்டும். இவ்விடம் இவளது அளக பாரத்தை சித்தரித்தவன், சிலந்தியின் வலேயில் ஈக்கள் சிக்குவதைவிட அதிகமாய், ஆண் மக்களுடைய ஆவி யெல்லாம் இந்த அழகிய வலைக்குட் சிக்கச்செய்ய வேண்டு மென்று, இவ்வாறு வரைந்தனன். ஆயினும் இந்தக் கண் களே எப்படி வர்ணித்தான் : இரண்டையும் வர்ணிக்கும் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது : ஒரு கண்ணேத் திட்டியவுடன், அவனது இரு கண்களேயும் அது வுள்ளே பறிக்கும் சக்தியைப் பெற்றதாகி, மற்ருெரு கண்ணே எழுத அசக்த னுயிருக்குமே அவனே ஆயினும் இப் படத்தைத் தக்கபடி மதிக்கவல்ல என் வார்த்தைகள் எவ்வளவு குறை படுகின்றனவோ, அவ்வளவு குறை படுகின்றது. இப் பட மானது அதோ இருக்கும் நிஜ உருவை வர்ணிப்பதில். என் அதிர்ஷ்டத்தை திரட்டிச் சுருக்கிய சுருள் இதோ இருக் கின்றது. வெளியுருவைக் கண்டு மோசம் போகாதே விருமபியது சரியே, வேண்டு மிச்சுகம் பெற்றதிது பெறும்பே றெனவே, உற்று நீர் ஒன்றை, உள்ளத்தி லெண்ணிர். இது உமக்கு இன்பம் தருவதேல், இவ் வதிர்ஷ்டமதை யேசுகமெனக் கொள்வீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/72&oldid=900247" இலிருந்து மீள்விக்கப்பட்டது