பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வாணிபுர வணிகன் 69 காதலி யவளேக் கருணையாய் நோக்கி ஏதமி லவள்வாய் முத்தம் கொள்வீர்!" இன்பமாம் சாசனம் !-கருத்தினிய மானே, உன் விருப்பத் தின்படியே (அவளே முத்தமிட்டு) கட்டளேப்படி கொடுக்க வும் கொள்ளவும் காத்து கிற்கின்றேன். பந்தயத்தின் பொருட்டு யுத்தம் புரியும் விர ரிருவருக்குள், ஜனங்கள் மெச்சும்படி ஜெயித்ததாக எண்னு மொருவன். கல்லென ஒலிக்கும் கரகோஷத்தைக் கேட்டு மதி மயங்கினவனுய், அச் சந்தோஷ் ஆரவாரம் தன் பொருட்டோ அல்லவோ என்று சந்தேகித்துக் கண்ணே விழித்து விழித்துப் பார்ப் பது போல், கவினுடைக் காதலியே, நானும், காண்பது கனவோ, உண்மையோ வென உள்ளத்தில் ஐயம் கொண்ட வய்ை, உன் வாயால் உண்மையென ஒப்புக்கொள்ளப்பட்டு ஊர்ஜிதமடையக் காத்து கிற்கின்றேன். பிராணநாதா, இதோ நிற்கின்றேன். நான். இப்பொழுது என்ன உள் ளபடி காண்கின்றீர். என்னேப்பற்றி மாத்திரம் நான் கருது வேனுயின், இப்பொழுது இருப்பதைப் பார்க் கிலும் மேம்பட்டிருக்க வேண்டுமென்று கோருவது பேராசை யாகும். ஆயினும், உமக்காக இதைவிட இருபது மடங்கு மேலான் ஸ்திதியில் இருக்கக் கோருவேன் , அழகில் இன் னும் ஆயிரமடங்கு அதிகப்பட்டவள ாயும், பனத்தில் இன் னும் பதினுயிர மடங்கு அதிகமா யுள்ளவளாயு மிருக்க விரும்புவேன். உம்மால் அதிகமாய் நன்கு மதிக்கப்படும் பொருட்டு, அழிவிலா தற்குணத்திலும், அழகிலும், அருஞ் செல்வத்திலும், ஆப்த நண்பரிலும், இன்னும் அதிகப்பட்ட வளாயிருக்கவேண்டு மென்பதே என் கோரிக்கை. என்னிடத் துள்ள குனங்களே யெல்லாம் ஒருங்குசேர்த்தாலும் ஒன்று மில்லாதவளாவேன் விவரமாகக் கூறுமிடத்து, நான் ஒன் அறுமறியாப் பேதை, ஒன்றும் கற்றவளல்ல, ஒன்று மனுபவ மற்றவள். ஆளுல் இந்த ஒரு நற் பாக்கிய முண்டு; இனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/73&oldid=900249" இலிருந்து மீள்விக்கப்பட்டது