பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வாணிபுர வணிகன் (அங்கம்-3 மேற் கற்கக் கால மல்ல என்கிற வயதாகவில்லை. இதைவிட மேலான பாக்கிய மொன்றுண்டு; அதாவது, கற்பித்தால் வராது என்று சொல்லும்படியாக 9/ಮಾ.57; மந்த புத்தி யுடைவளாய் வளர வில்லை. இவையெல்லாவற்றையும் விட மேலான பாக்கியமு மொன்றுண்டு; அதாவது, வணக்க முடைய என்பேதை யறிவை, கல் வழியில் பயிற்றுவிக் கும்படி, எனது நாதகைவும், நாயகனுகவும், அரசனுக வும் உம்மிடம், ஒப்புவிக்கின்ேறன். நான் உம்முடையவளாயி னேன் இட்சணமுதல். என்னுடைய வெல்லாம் உம்முடை யதாக மாற்றப்பட்டன. இதுவரையில் இந்த அழகிய மாளி கைக்கு அரசியாயிருந்தேன், என் வேலைக்காரர்களுக் கெல் லாம் எஜமானியா யிருந்தேன், நான் எனக்கே சொந்தமா யிருந்தேன். இப்பொழுதோ, இந்த வீடும், இந்த வேலைக் காரர்களும், இந்தச்செல்வமும், நானும், உம்முடைய வாகி விட்டோம். பிராணங்ாதா, இவைகளே யெல்லாம் இந்த மோதிரத்துடன் உமக்குக் கொடுக்கிறேன். இந்த மோதி ரத்தை இழந்துவிட்டாலோ, அல்லது கழற்றி விட்டாலோ, அல்லது யாருக்காவது கொடுத்துவிட்டாலோ, அதை உமது காதல் குன்றினதற்கு அறிகுறியாகவும், உம்மை கிந்திக்க எனக்கொரு காரணமாகவும், கொள்வேன். என் அழகியே, என்னே வாய் திறந்து பேச வகையறியாதவ ஞய்ச் செய்துவிட்டாய் நீ. என் உடலிலுள்ள உதிரமே உரைத்திடுகின்றது என்காதலே; பிரஜைகளைப் பிரியமாய் ஆண்டிடும்படி அரசன் ஒருவன், அருமையாம் பிரசங்கம் அழ குறச் செய்து முடித்ததும், சந்தோஷத்தினுல் சப்தித்திடும் ஜனங்கள் ஒன்ருய்ப் பேசும் எல்லாவார்த்தைகளும் ஒருங்கு கிடடி, அர்த்தமொன்று மில்லா ஒரே கோஷ்டமாகி, தெரி வித்தும் தெரியாமலும் இருக்கிற களிப்பினேக் குறிக்கும் குழப்பத்தைப்போல, என் அறிவானது கலங்கி கிற்கிறது. ஆயினும் இந்த மோதிரத்தை என் விரல் விட்டு நீக்கில்ை, உடனே என்னுயிரும் என் உடலே விட்டு நீங்கும். அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/74&oldid=900251" இலிருந்து மீள்விக்கப்பட்டது