பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வாணிபுர வணிகன் 71 நீ. 鲇彦。 சமயம் வந்தால். பானுசேனன் பரலோகம் போய்ச் சேர்ந்து விட்டான் என்று உறுதியாய்க் கூறு. ஐயா-அம்மணி, நாங்களெல்லாம் இதுவரையில் எங்கள் எண்ணம் ஈடேறவேண்டுமென்று காத்திருந்ததற்கு, இப் பொழுது அப்படியே நேர்ந்தமையால், உங்களே வாழ்த்து வதற்கு இதுதான் எங்களுக்குச் சமயம். நீங்க ளிருவரும் நீடுழி காலம் சுகமாய் தம்பதிகளாக வாழ்விர்களாக ! ஜயா, பானுசேனரே-என் அம்மணி, நீங்கள் என்ன சக் தோஷத்தை யெல்லாம் விரும்புவிரோ, அந்தச் சந்தோஷத் தையெல்லாம் பெறுவிரெனக் கோருகிறேன். ஏனெனில், என்னிடமிருந்து ஒன்றையும் விரும்பமாட்டிர் என்று உறுதி யாய்க் கூறுவேன். உங்களுடைய வாக்குத் தத்தத்தின்படி உங்களுக்கு விவாகத்தை முடித்திடுங்கால், எனக்கும் விவா கத்தைச் செய்துமுடிக்க வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்ளுகிறேன். உங்களே. மனப் பூர்த்தியாய் ஆயின் மனேவி யொருத்தியை யுேம் சம்பாதித்துக் கொள்ளல் வேண்டும். நீரே எனக்குச் சம்பாதித்துவிட்டீர். அதற்காக உமக்கொரு நமஸ்காரம் ! உமது கண்களைப்போலவே எனது கண்களும் சிக்கிரத்தில் பார்க்கும் சக்தியுள்ளன. நீர் தேவியைப் பார்த் தீர், நா னவளது தோழியைப் பார்த்தேன். நீர் காதல் கொண்டிர், நானும் காதல் கொண்டேன். தாமதம் என்பது உம்மிடத்தி லெப்படி யில்லையோ, அப்படியே என்னிடத் திலும் இல்லை. உம்முடைய அதிர்ஷ்டம் அந்தப் பெட்டி களிடத்தில் இருந்தது, என் னதிர்ஷ்டமும் அங்கேயே இருந்தது, கடந்ததை நோக்குங்கால். ஏனெனில், இதோ நிற்கும் மங்கையுடன் என்ன லான மட்டும் கஷ்டப்பட்டு வேண்டிப் பார்த்தேன், வா யுலர்ந்து போகும்படி என் காத லேக் குறித்து எத்தனேயோ சத்தியங்கள் செய்து பார்த்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/75&oldid=900253" இலிருந்து மீள்விக்கப்பட்டது