பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வாணிபுர வணிகன் 75 Łisr. மாறுபாடி அதை வாங்கிக்கொள்ளமாட்டேன் என்கிரு ம்ை. ஒரு மனுஷ்யனே அடியுடன் அழிக்க வேண்டுமென்அ பேராசை கொண்டிருக்கும் அவனேப்போன்ற மனுஷ்ய உரு வம் படைத்த ஒரு பிராணியை, அவனியில் எங்கும் கண்ட தில்லை நான். காலையும் மாலையும் அரசனிடம் போய்க் காத் திருந்து கிர்ப்பந்திக்கின்ருன். தனக்கு நியாயப்படி தீர்மா னிக்காவிட்டால் அநியாய ராஜ்யமென்று முறையிடுகின் ருன் , பெரிய வர்த்தகர்கள் இருபது பெயர், உயர்ந்த பதவி யிலிருக்கும் மந்திரி முதலானேர், அரசன், எல்லோரும் அவனேச் சமாதானப்படுத்திப் பார்த்தார்கள். தன் பத் திரத்தின்படி நியாயம் நடத்தி அபராதத்தைப் பெறவேண்டு மென்னும் குரூரமான பிடிவாதத்தினின்றும் அவனேத் திருப்ப, ஒருவராலும் முடியாமற் ப்ோயிற் று. தன்னுடைய பந்துக்க ளாகிய துரப்லாலிடமும், சேஷலசி லிடமும், அகக் தகாதரிடமிருந்து தனக்குச் சேரவேண்டிய தொகையை இருபது மடங்கு அதிகமாகப் பெறுவதைப் பார்க்கிலும், அவருடைய சதையையே பெறுவேன் என்று சத்தியம் செய்ததை, அவருட னிருந்தபொழுது கான் கேட்டிருக்கின்றேன். அன்றியும், ஐயா, அதிகாரிகள் கியாய சட்டத்தைக் கொண்டு அவரை அடக்காவிட்டால், அகந்தநாதர் பாடு கஷ்டமாய்த்தான் முடியும் என்பதை நான் அறிவேன். இவ்வாறு ஆபத்தில் அகப்பட்டிருப்பவர் உமது ஆப்த ரான நண்பரா ? அவனேவிட ஆப்கன் அவனியில் எனக்கு வேருெருவரில்லே. இணை யிலாக் கருணையுடைவன், அண்டினவரை ஆதரிப் பதில் அத்தனே அன்பன், உதவி புரிவதில் ஒருகாலும் தள ராத தயாள குண முடையவன்; இவ்வுலகில் உயிர் வாழும் வேறெம் மனிதனைவிட அவனிடம் பூர்வீகமான தண்ணளி யானது அதிகமாய்க் குடிகொண்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/77&oldid=900257" இலிருந்து மீள்விக்கப்பட்டது